முதுகுளத்தூர் அருகே வளநாட்டை சேர்ந்த மதலை முத்து மகன் செல்லின் ராஜா ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இரண்டு செக் புத்தகங்களில் கையொப்பமிட்டு தேவையான போது பணம் எடுக்ககூறி தனது தந்தையிடம் கொடுத்தார். வங்கி கணக்கில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 328 ரூபாய் இருப்பு இருந்தது.
இந்நிலையில் செக் புக்கில் ஒரு செக் மட்டும் காணாமல் போனது. இந்நிலையில், வங்கியிருந்து 11 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய் சென்னை நுங்கம்பாக்கம் ஐ.ஒ.பி., மூலமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. மதலைமுத்து, ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமாரிடம் புகார் செய்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சென்னையில் “மனோஜ் ஏஜன்சி’ நடத்தி வரும் மனோஜ்குமார், வங்கியிலிருந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது. குற்றப்பிரிவு போலீசார், மனோஜ்குமாரை தேடி போலீசார் சென்னை சென்றுள்ளனர்.
















