Mudukulathur

விபத்துகள் எனப்படும் படுகொலைகளும், தற்கொலைகளும்
புதுக்கோட்டை விபத்தில் இறந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ’லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்துமோதி இறந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.

இந்த நிலையில்….

விபத்தின் காரணமாய் அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு(!) இதைக் ‘கடுமையாகத்’தடுக்கும் வண்ணம், இப்படி வண்டிகளில் ஏற்றிச் செல்வது கடும் தண்டனைக்குரியது என எச்சரிக்கை விடலாம்.

இலவச பஸ் பாஸ் வைத்துக்கொண்டு அந்த வழித்தடத்தில் வரும் ஒரே ஒரு பேருந்தில், மற்ற பயணிகளோடு கசங்கி, படியில் தொங்கிக்கொண்டு நடத்துனரிடமும், ஓட்டுனரிடமும் திட்டுவாங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களின் புலம்பல் அரசின் செவிகளில் வழக்கம்போலவே விழாமல் போகலாம்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக எல்லா வழித்தடங்களிலும் பயணிக்க பேருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோமா என்பதை அலச வழக்கம்போலவே மறந்து  போகலாம்.

வேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் சிலவற்றை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்து, செய்தித்தாள்களில் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம்.

மூன்று-நான்கு மடங்காக பேருந்து நிறுத்தங்கள் கூடிவிட்ட நிலையிலும், போக்குவரத்து நெரிசல் பலமடங்கு மிகுந்துவிட்ட சூழலிலும், 30 வருடங்களுக்கு முன்பு பேருந்துகளுக்கு அளித்திருந்த அதே பயண நேரத்தை, தொடர்ந்து வைத்திருப்பது குறித்து கள்ளமௌனம் சாதிக்கலாம்.

பேருந்து ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை பயணிகள்கூட எவரும் குறைந்தபட்சம் கண்டிக்காததுபோலவே, போக்குவரத்துக் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டே, செல்போன் பேசும் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே பிடித்துப்பிடித்து அபராதம் விதிக்கலாம்.

குடித்துவிட்டு ஓட்டுவதில் 99% இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே தொடர்ந்து சிக்கும் நிலையும் தொடர்ந்து கொண்டேயிருக்கலாம்.

தேசிய, மாநில மற்றும் நகரச் சாலையோரங்களில் தொடர்ந்து இயங்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து தொய்வின்றி இயங்கிக் கொண்டேயிருக்கலாம்.

மரணக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்கள் உடனடியாகவும், செய்தித்தாளில் பார்ப்பவர்கள் தாமதாமாகவும் பதைபதைக்கலாம்.

இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை, ஒரு தலைமுறையின் வேர் வீழ்த்தப்பட்டதாக இழந்த குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தைச் சுமக்கலாம்.

அரசும், அமைப்புகளும் இறப்பிற்கான இழப்பென்று ஒரு தொகையை காசோலையாய் நீட்டிவிட்டு கடந்துபோகலாம்.

40 வரி எழுதத்தெரிந்தவர்கள் இதோ என்னைப் போல் கிறுக்கிக் கொண்டிருக்கலாம். நாலுவரியில் மடக்கி சுருக்கமாய் எழுத்தத் தெரிந்தவர்கள் கவிதையாய் எழுதலாம். மூன்றாந்தர பத்திரிக்கைகள் “ஆட்டோ அப்பளமாய் நொறுங்கியது” என தலைப்புச்செய்தி எழுதிவிட்டு, மதியச் சோத்தில் இரசத்தில் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு உண்ணலாம்.

விபத்துகள் என்பது கட்டுப்பாட்டை மீறி கண நேரத்தில் நிகழ்வதுதான். தடுக்க முடிவதில்லைதான். பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லைதான். ஆனால், விபத்துக்கு ஏதுவான எல்லாக் காரணிகளையும் நாமே தயாராக உருவாக்கி வைத்துக்கொண்டு ”படுகொலைகளை, தற்கொலைகளை” விபத்துதானேயென நாளைய பரபரப்பில் மறந்துபோகும் கொடுமையும் வாடிக்கையாகிப் போகலாம்.

வல்லரசுக் கனவு வளர்ந்து கொண்டேயிருக்கலாம்!

படம் : இணையம்

http://maaruthal.blogspot.in/<wbr />2013/06/blog-post_19.html

கசியும் மௌனம்

www.maaruthal.blogspot.in

பறவையைப் போல் பாடும் எலி
K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,

எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க.

பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். எலிகள் குறித்து நடத்திய ஆய்வின் போது எதிர்பாராத விதமாக இந்தப் பாடும் எலி பிறந்ததாக ஆராய்ச்சிக்குழு தலைவர் டாக்டர். அரிகுனி உச்சிமுரா கூறுகிறார். அது மட்டுமல்ல. இந்தப்பாடும் எலிகளைக் கொண்டு மேலும் சோதனைகள் நடத்தி மனிதனைப் போல் பேசும் மிக்கி மவுஸ் எலிகளையும் உருவாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் டாக்டர் உச்சிமுரா கூறுகிறார்.

ஆஹா ! கிளம்பிட்டாங்கய்யா ! இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு நடிகர் வடிவேலு பாணியில் நாம் சொன்னாலும் ஆராய்ச்சி தொடர்வது உறுதி. ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு “எவால்வ்டு மவுஸ் ப்ராஜக்ட்” என்ற ஆய்வில் புதிய உடலமைப்பு கொண்ட எலிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக எலியின் மரபுப் பண்புகளைச் சுமந்திருக்கும் டி.என்.ஏவை நகலெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஒரு தவறு ஏற்பட்டது. டி.என்.ஏ தவறுதலாக நகலெடுக்கப்பட்டது. இதனை ஆராய்ச்சிக் குழுவினரும் கவனிக்கத் தவறி விட்டனர்.

அதன் பின்னர் சோதனையில் பிறந்த எலிகளை ஒவ்வொன்றாக சோதனையிட்ட போது அவற்றில் ஒரு எலி பறவையைப் போன்று ஒலியெழுப்பி பாடுவதைக் கண்டு குழுவினர் வியப்படைந்தனர். உடலமைப்பில் மாறுபாடு கொண்ட எலிகளே பிறக்கும் என்று எதிர்பார்த்த டாக்டர் உச்சி முராவும், அவரது குழுவினரும் பாடும் எலி பிறந்தது கண்டு மகிழ்ச்சியில் உறைந்து போய் நின்றனர். இந்தப் பாடும் எலி சாதாரண எலிகளை விடக் குட்டையான கால்களைக் கொண்டதாகவும், டாக்ஸண்ட் எனப்படும் குட்டையான கால்களுடைய நாயின் வாலைப் போன்றதொரு வாலை கொண்டதாகவும் காணப்படுகிறது.

மேற்கு ஜப்பானிலுள்ள ஒஸாகா பல்கலைக்கழகத்தின் ஃப்ராண்டியர் பயோ சயின்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர் டகிஷியாகி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடும் எலிகளை உருவாக்கியுள்ளார். இந்த எலிகளைக் கொண்டு மனிதனைப் போல் பேசும் எலிகளை உருவாக்க தொடர் ஆய்வுகள் அங்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. பாடும் பறவைகளை வைத்துப் பல நாடுகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கையில் இவர்கள் பாடும் எலிகளைப் பேச வைக்க முயற்சி செய்கின்றனர்.

பறவைகளை விட எலிகள் மூலம் ஆய்வு நடத்துவது எளிதானது. ஏனெனில் எலிகள் மனிதனைப் போன்று பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. மூளை அமைப்பிலும் கிட்டத்தட்ட மனித மூளை அமைப்பை ஒத்திருக்கின்றன. மேலும் உயிர் வாழ்வியல் அடிப்படையிலும் மனிதனைப் போன்றே எலிகள் வாழ்கின்றன. டாக்டர் உச்சிமுரா இந்தப் பாடும் எலியை பல்வேறு சூழ்நிலை மாற்றங்களுக்கு உட்படுத்தியபோது அதன் பாடும் ஒலி மாறுபடுவதைக் கண்டறிந்தார்.

குறிப்பாக பெண் எலிகளுக்கிடையே இந்த எலி அதிக ஒலியெழுப்பி பாடியதைக் கண்டு அவர் வியப்படைந்தார். சாதாரண எலிகளை விட இதனிடமிருந்து அதிக அல்ட்ரா ஒலியலைகள் வெளிப்படுவதையும் அவர் கண்டுபிடித்துள்ளார். “எலிகளைப் பேச வைக்கும் எங்கள் கடின முயற்சிக்கு ‘முட்டாள் தனம்’ என்று மக்கள் கூறினாலும் நிச்சயம் ஒரு நாள் நாங்கள் ஜெயிப்போம். பேசும் மிக்கி மவுஸ் எலிகளை ஒருநாள் உற்பத்தி செய்வோம்” என்று டாக்டர் உச்சிமுரா கண்களில் கனவுகள் மின்னக் கூறுகிறார்.

இனி வருங்காலங்களில் எலி நம் வீட்டிற்குள் நுழையும் முன்னர் “எக்ஸ்கியூஸ்மீ, மே ஐ கம் இன்?” என்று கேட்டுக் கொண்டு நுழையலாம். சாலையில் ஓடும் எலி சைக்கிள் ஓட்டுபவரைப் பார்த்து “பார்த்துப் போடா கஸ்மாலம் வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?” என்று திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கலி காலம் முத்தி எலியை பாட வச்சிருச்சு.

நன்றி :

முகவை முரசு

டிசம்பர் 31 – ஜனவரி 06, 2011

பாஸ்மதி அரிசியின் பிதாமகன்
அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்

ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை அன்னியச் செலவாணியாக ஈட்டித்தருகிறது பாஸ்மதி அரிசி. இதில் அதிக மகசூல் தரும் பூஸா பாஸ்மதி மட்டும் ஆயிரம் கோடியைத் தருவது பலரும் அறிந்த செய்தி. ஆனால், இந்த ரகத்தை உருவாக்குவதற்காக இருபதாண்டு காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தமிழர் ஒருவர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர் நெல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாகத் திகழும் இ.ஏ.சித்தீக் (74) சூஃபி பெண் கவிஞர் கச்சிப்பிள்ளையம்மாளின் மகன் வயிற்று வாரிசு. இவரது இருபதாண்டு கால அயராத உழைப்பால் உருவான பூஸா பாஸ்மதி ரகம்தான் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கிறது. அதன் தரத்துக்கும் விளைச்சலுக்கும் ஈடாக இன்று வரை வேறு பாஸ்மதி ரகம் வெளிவரவில்லை.

இரண்டு, மூன்று மடங்கு அதிக விளைச்சல் தரும் இந்த பாஸ்மதி ரகம், இந்திய ஆராய்ச்சி வரலாற்றில் பெரும் திருப்புமுனை ஆகும். பாஸ்மதி ரகத்துக்கு காப்புரிமைச் சோதனை வந்தபோது, இந்தியாவின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டி நமது விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்ததிலும் இவரது பங்கு அதிகம். கலப்பின அரிசி ரகங்கள் வருவதற்கும் இவரே மூல விதை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மாணவராக, அவரது வழிகாட்டுதலில் டாக்டர் பட்டம் பெற்று பிறகு அவரது சக விஞ்ஞானியாக உயர்ந்தவர். தில்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றி ஐந்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பல உயர்ந்த விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ள சித்தீக், இன்றும் தனது குருவாக மதிப்பது எம்.எஸ். சுவாமிநாதனை. குருவுக்கும் சீடர் மீது அபார மதிப்பு, நம்பிக்கை. இருவரும் சேர்ந்து வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம்.

சித்தீக்கின் மனைவி பாத்துமுத்து, இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இத்தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் மருத்துவம், வேளாண்மை, பொறியியல் துறைகளில் பிரகாசிக்கின்றனர். ஓய்வு பெற்ற பிறகும் மூத்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப் பணி தொடர்ந்து நாட்டுக்குத் தேவை என்பதால் தேசியப் பேராசிரியர் பதவியை உருவாக்கி கெளரவித்து வருகிறது இந்திய விவசாய ஆய்வு நிறுவனம் (ஐ.சி.ஆர்.) ஒரு தலைசிறந்த விஞ்ஞானிக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட கெளரவம் சித்தீக்கைத் தேடி வந்தது. நாட்டிலேயே இதுபோன்ற கெளரவத்தைப் பெற்றவர்கள் ஏழெட்டுப் பேர்தான் இருப்பார்கள். துணை வேந்தர்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் வசதிகளுடன் இவர் தனது ஆராய்ச்சியைத் தொடர ஒன்றரைக் கோடியை மானியமாகத் தந்து மத்திய அரசு கெளரவித்துள்ளது.

இப்போது தங்க அரிசி (கோல்டன் ரைஸ்) பற்றிய ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராக உள்ள சித்தீக், பிலிப்பைன்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சிக் கழகத்தின் அறங்காவல் குழுவுக்கு ஆசியப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். ஆழ்ந்த பட்டறிவும் தேர்ந்த ஆய்வுத்திறனும் கொண்ட இந்த விஞ்ஞானியின் தலைமையில், உயிரித் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு இருக்கையை உருவாக்கிச் சிறப்பித்துள்ளது ஆந்திர வேளாண் பல்கலைக்கழகம்.

உயிரினங்களின் டி.என்.ஏ ஜீன்கள் ஆராய்ச்சியில், நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய டி.என்.ஏ கைரேகை மற்றும் பரிசோதனை மையம். முதல் முறையாக சித்தீக்குக்கு ஓர் ஆய்வு கூடத்தை ஏற்படுத்தியது. இவரது இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. தந்தை இப்ராஹீம் அலி பர்மாவில் வணிகம் செய்து வந்தவர். இரண்டாவது உலகப்போர் காரணமாக அங்கிருந்து பணம் வராமல் தவியாய் தவித்த பல குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. வறுமையான சூழலிலும், செம்மையான கல்வி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தை இவரது மனதில் ஆழ ஊண்றியவர் இவரது தாய் பாத்திமா.

சித்தீக்குக்கு 14 வயதாக இருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். தாய், தந்தை ஆதரவில்லாத சூழ்நிலையில் பள்ளிக் கல்வியை முடித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தாயார் பாத்திமா பெயரால் இளையான்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ. 1 லட்சமும், புதூர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 50 ஆயிரமும் வைப்பு நிதி செலுத்தி அறக்கட்டளை தொடங்கினார்.

குறுவைக்கும் காருக்கும் அதிக மகசூல் தரும் கண்ணகியைப் பயிரிடுங்கள் என்பது, ஒரு காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் எதிரொலித்த வாசகம். இந்த கண்ணகியைத் தந்தவரும் சித்தீக்தான். இதுபோன்ற சித்தீக்குகள் ஏராளம். அபுபக்கர் சித்தீக் என்பது இவரது முழுப்பெயர். இந்திய திருநாட்டில் சாதனையாளர்களாக பல சித்தீக்குகள் திகழ்ந்து வந்தாலும் சிறுபான்மையினர்களின் சாதனைகளை, தியாகங்களை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டுவது சமூகத்தில் குறைவாகவே உள்ளது.

நன்றி :

முகவை முரசு

ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011

சாதிக்க ஏழ்மை ஒரு தடை அல்ல …………….
எண்ணமே வெற்றிக்கு வழிகாட்டும்

ஜனுபியா பவுசியா பேகம், தேவிபட்டினம்

உலகில் பல அரிய சாதனைகளையும், மங்காப் புகழையும் பெற்றுத் திகழ்ந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு கடின உழைப்பு, ஒரு உந்து சக்தி, தூண்டுகோல் என யாராவது செயல்பட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் சாதித்தவர்களின் மனதை நெகிழச் செய்தவர்கள் இருந்திருப்பர்.

ஒரு விருட்சம் சிறப்பாக வளர்வதற்கு சத்தான விதையே காரணம் என்றால் அது மிகையாகாது. அதுபோல உலகத்தில் வாழ்ந்து சாதித்தவர்களின் சிலரது வாழ்க்கை ஏட்டை புரட்டிப் பார்த்தால் அவர்கள் கடந்து வந்த கடினப்பாதை புரியும். நான் ஏழை, என்னால் எப்படி முடியும்? என இன்றைய இளைய சமுதாயத்தினர் பலருக்கும் ஒரு தாக்கம் மனதில் மெலிதாக இழை அழிக்க உருவாகும். புரையோடவரும் புண் என இளைய சமுதாயத்தினர் தங்களால் முடியும் என்ற எண்ணத்தை, ஆக்கத்தை, நம்பிக்கையை முதலில் தங்களுக்குள்ளாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்த சிலரது தடயத்தை பார்ப்போமா?

1) நம் இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக வீற்றிருந்த அணு விஞ்ஞானி பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீன் பிடித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையும் ஒரு மீனவரே.

2) அமெரிக்காவை ஆண்ட ஆபிரகாம் லிங்கனின் தந்தை ஒரு விறகு வியாபாரி.

3) புதுக்கவிதைகளும், மரபுக்கவிதைகளும், புனைந்த ஷேக்ஸ்பியரின் தந்தை குதிரை கண்காணிப்பாளர்.

4) கணிதமேதை சகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் வித்தை காட்டும் தொழிலாளி

5) இத்தாலியத் தலைவர் கரிபால்டின் தந்தை ஒரு மீன்பிடித்தொழிலாளி.

6) சர்தார் வல்லபாய் படேலின் தந்தை விவசாயி

7) தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தை படகு கட்டும் தொழிலாளி

8) ரஷ்யத் தலைவர் ஸ்டாலினின் தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி

9) அணு விஞ்ஞானி ஜே.ஜே. தாம்சனின் தந்தை புத்தக வியாபாரி

10) மின்சாரத்தைக் கண்டுபிடித்த ஆம்பிளரின் தந்தை சணல் தயாரிக்கும் தொழிலாளி

11) சோடாவை கண்டுபிடித்த ஜேஸப் பிரிஸ்ட்லியின் தந்தை நெசவுத்தொழிலாளி

12) விஞ்ஞானி கலிலியோவின் தந்தை கம்பளம் நெய்யும் தொழிலாளி.

இவ்வாறு ஏழ்மையையே வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு பிறந்த இவர்களால் மட்டும் எவ்வாறு சாதிக்க முடிந்தது? யோசிக்க முடிகிறதா? இவை மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கையின் தத்துவத்தையும் நிரூபித்து வருகிறது. இதுதான் நம்முடைய எண்ணத்தின் வாழ்க்கையாக அமைந்துள்ளது.

நன்றி :

முகவை முரசு

ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011

100 ஆண்டு நிறைவு கண்ட ராமநாதபுரம் மாவட்டம்
1910 ல் ஆரம்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2010 ஜூன் 1 ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி மாவட்ட நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொன்மைச் சிறப்பும், சரித்திர மேன்மையும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் 1910ஜூன் 1ல் உருவாக்கப்பட்டது. முன்பு மதுரை மாவட்டத்திற்குள் ராமநாதபுரம் கோட்டம் இருந்தது. மதுரை மாவட்டத்தின் நிர்வாக பணிச்சுமையை குறைக்கும் விதமாக ராமநாதபுரம் கோட்டத்தை அதிலிருந்து நீக்கி, அதனை கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சர் வில்லியம் மேயர் முடுவெடுத்தார்.

பட்டுக்கோட்டை வட்டத்தின் தென்பகுதியை தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்தும், நெல்லை மாவட்டத்திலிருந்து சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களை பிரித்தும் ராமநாதபுரம் கோட்டத்துடன் இணைந்து இப்புதிய மாவட்டம் உருவாக்க முடிவானது. ஐந்தாயிரத்து 389 சதுரமைல் பரப்புடன், இருபதுலட்சம் மக்கள் தொகையில் 9 வட்டம் 4 கோட்டங்களுடன் மிகப்பரந்து நிர்வாகச் சுமையில் தவித்து வந்த நெல்லை மாவட்டத்திலிருந்து சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களை பிரித்தெடுத்து ராமநாதபுரத்துடன் சேர்த்தது வரவேற்பு பெற்றது.

புதிய ராமநாதபுரம் மாவட்டமானது மதுரை மாவட்டத்தின் ராமநாதபுரம் கோட்டமும், நெல்லை மாவட்டத்தின் (நெல்லை மாவட்டத்திலேயே தொடர்ந்து இருந்து வரும் சாத்தூர் வட்டத்தின் ஒரு பகுதி நீங்கலாக) சாத்தூர் கோட்டமும், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம் அறந்தாங்கிப் பகுதியும் அடங்கியதாக இருக்கும் என வரையறுக்கப்பட்டது. கலெக்டர், மாவட்ட செசன்ஸ் நீதிபதி ஆகியோரை இம்மாவட்டத்திற்கு நியமிக்கவும் முடிவானது. இந்நிலையில் ரயில்போக்குவரத்து மேம்பாட்டுப்பணிகளை கருத்தில் கொண்டு புதிய ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கும் திட்டம் 1909 ல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. எனினும் ராமநாதபுரம் கோட்டத்தை பிரித்து ராமநாதபுரம், தேவகோட்டை என இரு கோட்டங்களாக பிரித்திட அரசு ஒப்புதல் அளித்தது.

இதன்பிறகு இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சர் 1910 மார்ச்சில் புதிய ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தார். இம்மாவட்டம் தனியாக இயங்கிட உயர் நீதிமன்றமும் விரும்பியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிடையே ரயில்போக்குவரத்து இல்லாத குறையை கருத்தில் கொண்டு கலெக்டரும், மாவட்ட நீதிபதியும் மதுரை மாநகரிலேயே தங்கள் அலுவலகங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

புதிய ராமநாதபுரம் மாவட்டம் அமைப்பது குறித்து ஏற்கனவே முடிவானதில் தஞ்சை மாவட்டத்து அறந்தாங்கி பகுதியை நீக்கி விட்டு ஏனைய பகுதிகளை மட்டும் கொண்டு புதிய ராமநாதபுரம் மாவட்டத்தை அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது.

புதிய மாவட்ட பணிக்காக ஜே.எப். பிரியண்ட் என்ற ஆங்கில ஐசிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, 1910ம் ஆண்டு ஜூன் முதல் நாளில் ராமநாதபுரம் மாவட்டம் உருவானது. இதன்படி ராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை பகுதிகளும், தேவகோட்டை கோட்டத்தில் திருப்பத்தூர், திருவாடானை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் பகுதிகளும் கொண்டு இப்புதிய மாவட்டம் இயங்கத் துவங்கின. பின்னர் மாவட்ட தலைநகரிலேயே கலெக்டர், நீதிபதிக்கான அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1984 ஜூலை 17ல் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டன. பல்வேறு சுற்றுலாப்பகுதிகள், ஆன்மீக இடங்களைக் கொண்டும், அரசியல்வாதிகள், கலைஞர்கள் என புகழ்மிக்க பலரை வழங்கியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2010 ஜூன் முதல் தேதியுடன் நூறு வயதாகிறது.

தமிழக வரலாற்று ஆய்வாளர் கோ. மாரிசேர்வை கூறுகையில் ‘ராமநாதபுரம் மாவட்டம் அமைந்து நூறாண்டுகள் முடிகிறது. பெருமை மிக்க இம்மாவட்டத்திற்கான நூற்றாண்டு விழா 2010 ஜூன் 1ல் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மாவட்டத்தின் பழமை வரலாற்றுத்தகவல்கள் மேன்மைகளை அந்நாளில் மாவட்டம் முழுவதும் கண்காட்சிகளாக நடத்துவதுடன், மத்திய அரசு உதவியில் தபால்தலை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

நன்றி : தினகரன்

தமிழ்நாடு ஹோட்டலுக்கு சீல் வைப்பு
மண்டபம் பகுதியில் இயங்கி வந்த தமிழ்நாடு ஹோட்டலுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மண்டபத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டலை தாமரைக் குளத்தைச் சேர்ந்த சேதுக்கரை என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார்.

இங்கு 4 மாதங்களுக்கு முன் அழகிகளை வைத்து விபசாரம் நடைபெற்றதாக  மண்டபம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், சுற்றுலா மற்றும் வருவாய்த் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மதுரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி, ராமேசுவரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர், மண்டபம் வருவாய் ஆய்வாளர் பழனிகுமார், மண்டபம் காவல் ஆய்வாளர் ஜோசப் செல்வராஜ், மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சேதுக்கரையின் ஒப்பந்தத்தை ரத்து செய்து போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.

ஜுன் 21, ஷார்ஜாவில் தமிழக சிறுவனின் ஒருங்கிணைப்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி
ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார நகரமாம் ஷார்ஜாவில் 13 வயது தமிழக சிறுவன் ஹுமைத் நடத்தி வரும் பசுமை பூகோளம் ( Green Globe ) எனும் அமைப்பின் சார்பில் ஷார்ஜா கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணி 21.06.2013 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இப்பணி ஷார்ஜா பெண்கள் சங்கத்தின் அருகாமையில் நடைபெறும். இப்பணிக்கு ஷார்ஜா நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பீஅஹ் ( Bee’ah ) எனும் நிறுவனம் உறுதுணை வழங்கியுள்ளது.

இடம் குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 71 77 123 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஷார்ஜா பள்ளியில் பயின்று வரும் ஹுமைத் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை அமீரக தகவல் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராகப் பயின்று வருகிறார்.

துபாயில் கோடையில் குளிர்ச்சியை ஏற்படுத்திய சிரிப்பலை
துபாய் உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அல் கிசைஸ், ஆப்பிள் இண்டெர்நேசனல் ஸ்கூலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசியதோடு, நகைச்சுவையாளர் சங்கம் துபாயில் வேலை செய்யும் தமிழர்களுக்கு பணிமிகுவால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் மாதந்தோரும் செயல்பட்டு வருவதாகவும்,  அதனை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ளுமாரும் வேண்டுகோள் விடுத்தார்.

ஹியூமர் கிளப்பின் உறுப்பினர்களான ‘குபீர்’ கபீர்,<wbr /> ‘வெல்ஃபேர்’ ராஜேந்திரன் மற்றும் விருந்தினர்களான வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகி காவிரிமைந்தன், ‘டோஸ்ட் மாஸ்டர்’ சசி நாயர், ரவி, முகம்மது சாலிஹ், சிரிநிவாஸ், சுவாமிநாதன், குறிஞ்சிதாசன், வி.களத்தூர் ஷா மற்றும் சென்னை என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஸர்ஃப்ராஸ் சித்தீக் ஆகியோர் நகைச்சுவை பேச்சால் வந்திருந்தவர்களை சிரிக்க வைத்து மகிழ்வித்தார்கள்.

செல்வி முத்துக்கோதை, செல்வன் தண்ணீர்மலை, செல்வி. ஹரிஸ்மிதா, சிறுமி ஆயிஷா சித்தீக் ஆகியோரும் நகைச்சுவை துணுக்குகளை சொல்லி அரங்கினை அதிர வைத்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

அரங்கத்தில் சிரிப்பின் மகத்துவத்தை பற்றி தான்சான்யா நாட்டில் எடுக்கப்பட்ட LAUGHOLOGY என்ற வீடியோ காட்சியும் போட்டு காட்டப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கோடை வெப்பத்தையும் மறந்து நகைச்சுவையால் குளிர்ந்து மகிழ்ந்து சென்றார்கள். சிறப்பு அழைப்பாளராக துபாய் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் எம்.டி. ஆபீஸ் மானேஜர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் புரவலர் ‘பாலைவன நகைச்சுவைப்புயல்’ கே.ஜி. குணா அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை பேச்சோடு தொகுத்து வழங்கினார், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற தாரக மந்திரத்தை நினைவுபடுத்தியதோடு நகைச்சுவை உணர்வோடு வாழ வேண்டியதின் அவசியத்தையும் வலியிறுத்தினார்.

விழா முடிவில் வருகை தந்த அனைவருக்கும் சங்கத்தின் தலைவர் முகைதீன் பிச்சை நன்றி தெரிவித்து பேசியதோடு நகைச்சுவையில் ஆரவம் கொண்ட அனைவருக்கும் நகைச்சுவையாளர் சங்கத்தின் மேடை என்றும் காத்திருக்கிறது என்றும் அதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாரும் கேட்டுக் கொண்டார். கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் சுல்தான், கமிட்டி உறுப்பினர்கள்  அன்சாரி, மரைக்கா, காதர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

ஒளிரும் மரங்கள்
K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,

ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே வெளிச்சம் தந்தால் எப்படியிருக்கும்? இதோ ! “ஒளிரும் மரங்கள்” உருவாகி விட்டன.

தைவான் நாட்டின் பயன்பாடு அறிவியல் ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானி டாக்டர் யென் – சூன் –சூ தலைமையிலான குழு இரவில் ஒளிரும் மரங்களை உருவாக்கியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அறிவியல் அமைப்பான “ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி” இக்கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது. தங்கநிற நானோ துகள்கள் பற்றிய ஆராய்ச்சியில் இக்குழுவினர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்று ஆராய்ச்சிக் குழுவினர் வியப்போடு கூறுகின்றனர்.

பகோபா கரோலினியானா எனும் அறிவியல் பெயர் கொண்ட தாவரத்தின் இலைகளில் தங்க நிற நானோ துகள்களைத் தடவிய போது சிவப்பு நிறத்தில் அம்மரத்தின் இலைகள் ஒளிர்வதைக் குழுவினர் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இக்கண்டுபிடிப்பின் மூலம் இனி மரங்களையே தெரு விளக்குகளாகப் பயன்படுத்த முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். இதனால் தெரு விளக்குகளுக்கு செலவழியும் மின்சாரம் பெருமளவில் சேமிக்கப்படும். சுற்றுச்சூழலில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு காற்று மண்டலத்தில் அதிகரிக்கும் போது “பசுமை இல்ல விளைவு” எனப்படும் புவி வெப்பமயமாதல் நிகழ்கிறது. எனவே இக்கண்டுபிடிப்பு சுற்றுசூழல் தூய்மையாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது (LED) விளக்குகள் (Light Emiting Diode) பயன்பாட்டில் இருக்கின்றன. இவ்விளக்குகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாஸ்பர் தூள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒளிரும் மரங்களில் இவ்வாறான தீங்குகள் எதுவும் இல்லை. மேலும் விளக்குகளை விட அதிக ஒளி உமிழும் மரங்களை உருவாக்குதலில் தற்போது இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அடுத்த கட்ட ஆய்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பகோபா கரோலினியானா தாவரம் மட்டுமின்றி வேறு எந்த வகைத் தாவரத்தையும் ஒளிரும் மரங்களாக மாற்றமுடியும். ஒவ்வொரு தாவரத்தின் இலைகளில் ‘குளோரோஃபில்’ எனப்படும். பச்சைய நிறமிகள் உள்ளன. இவைதான் ஒளிச்சேர்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. தங்க நிற நானோ துகள்களை இலைகளில் தடவும்போது, அவை இந்த குளோரோஃபில்களைத் தூண்டி சிவப்பு நிறத்தை உமிழச் செய்கின்றன. எனவே பச்சையம் உள்ள அனைத்து தாவரங்களையும் ஒளிர வைக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இனி எதிர்காலத்தில் ஒளிரும் மரங்களே இரவு நேரச் சாலைகளை அலங்கரிக்கப் போகின்றன.

நம் நாட்டில் முதன் முதலாக புகையைக் கக்கிக் கொண்டு பெரிய விளக்கோடு புகைவண்டி வருகை தந்தபோது கொள்ளி வாய் பிசாசு வருதுப்போல் என்று அலறி ஓடி ஒளிந்தனர் கிராமவாசிகள். தற்போது மரங்கள் ஒளிர்வதைப் பார்த்து என்ன செய்யப் போகிறார்களோ? இருக்கின்ற மரத்தை வெட்டிக் கொண்டும், அரச மரத்தைச் சுற்றிக் கொண்டும், சுடுகாட்டு மரத்தில் ஆணியடித்துக் கொண்டும் மரத்தடிக்கதைகள் பேசிக் கொண்டும் நேரம் போக்கும் நம்மவர்கள் சிந்திப்பார்களா?

நன்றி :

முகவை முரசு

ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011

2,000 ஏக்கர் பருத்தி பாதிப்பு தத்தளிக்கும் முதுகுளத்தூர் விவசாயிகள்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில், போதிய மழையின்றி, 2,000 ஏக்கர் பருத்தி விவசாயம் பாதிக்கபட்டு, விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர்.

பருவமழை பொய்ப்பால் நெல், மிளகாய் சாகுபடியில் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி முதுகுளத்தூர், ஆணைசேரி, கீழத்தூவல், காக்கூர், புளியங்குடி, பொன்னக்கனேரி, தாழியரேந்தல், உலையூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்தனர்.

தொடர்ந்து மழையின்றி மகசூல் கிடைக்கும் பருவத்தில் பருத்தி காய்கள் கருகி வருகின்றன. கடன் வாங்கி ஏற்கனவே நெல், மிளகாய் விவசாயத்தில், இழப்பை சந்தித்த விவசாயிகள், மேலும் கடனில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து காக்கூர் விவசாயி பொன்னுச்சாமி கூறுகையில், “”பருத்தியை, ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை பாய்ச்சி, காப்பாற்றலாம் என்றால், விவசாயத்திற்காக 8 மணி நேரம் வழங்கபட்ட மின்சாரம், 3 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இதுவும் முழுமையாக கிடைக்காததால், பருத்தி பாழாய் போனது. பருத்திக்கும் அரசு, நிவாரணம் வழங்க வேண்டும்,” என்றார்.