94 குழந்தைகள் பலியான சம்பவம் இன்று 10ம் ஆண்டு நினைவு தினம்

94 குழந்தைகள் பலியான சம்பவம் இன்று 10ம் ஆண்டு நினைவு தினம்

எரிந்தது குழந்தைகள் அல்ல எதிர்கால இந்தியாவும் தான்!

 

கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்த 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இறந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை 6 மணிக்கு தீயில் கருகி இறந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் அவரவர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து குழந்தைகளின் புகைப்படம் முன் படையலிட்டு அஞ்சலி செலுத்தினர்.

காலை 7 மணிக்கு தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் சார்பில் அமிர்தா நகரில் குழந்தைகளை இழந்த பெற்றோரால் கட்டப்பட்ட அமிர்த விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளி முன் அஞ்சலி செலுத்தும் நிகழ¢ச்சி நடந்தது. 10.30 மணிக்கு தமிழக அரசு சார்பில் எழுப்பியுள்ள நினைவு மண்டபத் தில் மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீவிபத்து நடந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தொடர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு கிருஷ்ணா பள்ளியில் இருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் 94 அகல் தீபங்களை ஊர்வலமாக எடுத்து சென்று மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply