498 மதிப்பெண்கள் பெற்று மாணவி அபிநயா மாவட்டத்தில் முதலிடம்; மாநிலத்தில் 2ம் இடம்

ராமநாதபுரம் நேசனல் அகாடமி மெட்ரிகுலே சன் பள்ளி மாணவி அபி நயா 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அள வில் முதலிடத்தையும், மாநில அளவில் 2ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள் ளார்.

முதலிடம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ராமநாதபுரம் நேச னல் அகாடமி மெட்ரிகுலே சன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சி.அபிநயா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடத் தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி அபிநயா பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ்-98, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவி யல்-100.

மாணவியின் தந்தை சந்திர சேகரன் ராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி ஏ.பி.சி. பள்ளியில் ஒருங்கிணைப்பா ளராகவும், தாய் சாந்தி ராமநா தபுரம் சரசுவதி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். சாதனை மாணவி அபிநயா கூறியதாவது:- மாநில அள வில் 2ம் இடம் பிடித்தது மிக வும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடவுளுக்கும், எனது பெற்றோர், பள்ளி நிர்வாகி டாக்டர் செய்யதா, நிர்வாகி இக்பால், பள்ளி முதல்வர் ராஜமுத்து, நிர்வாக ஆலோசகர் சங்கரலிங்கம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கி றேன்.

ஏனெனில் இவர்கள் தான் எனது இந்த சாதனைக்கு உத வியாகவும், உறுதுணையா கவும், ஊக்கமாகவும் இருந்த னர். எனது முதல் பருவத் தேர்வு முடிவின் போது நான் 470 மதிப்பெண்கள் தான் எடுத்தேன். அப்போது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தி உன்னால் மாநில அளவில் மதிப்பெண் பெற முடியும், முயற்சி செய் என்று ஊக்கப்ப டுத்தினர். இதை மனதில் கொண்டு அதிகமாக சிரமம் எடுத்துக்கொள்ளாமல் மனதை இலகுவாக்கி படித் தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. பள்ளியில் அடிக்கடி நடத்திய தேர்வுகள் தான் எனக்கு மிகவும் உதவி யாக இருந்தது. நான் முதலில் படிக்க மட்டுமே செய்தேன். எனது ஆசிரியர்கள் படித்தால் சிறிது காலம் மட்டுமே மன தில் நிற்கும். எழுதி பார்த்தால் தான் வாழ்க்கை முழுவதும் மனதில் நிற்கும் என்று அறி வுரை கூறினர். அதன்படி தின மும் படித்ததை எழுதிப் பார்த்ததால் இந்த சாத னையை படைக்க முடிந்தது. நான் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்து எனது பெற்றோர் விருப்பப்படி டாக்டராகி அதன் பின்னர் எனது விருப் பப்படி கலெக்டராகவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

8 பேர் 2ம் இடம்

இதே பள்ளி மாணவி எம்.அபிநயா 496 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ்-96, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவி யல்-100. மாணவியின் தந்தை முருகேசன் அரசு ஆஸ்பத்தி ரியில் மருந்தாளுனராகவும், தாய் இந்துமதி பட்டணம்காத் தான் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். மாணவி அபி நயா கூறியதாவது:- மாவட்ட அளவில் 2வது இடம் பிடித் தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக எனது பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரி யர் மற்றும் அதற்கும் மேலாக ஆண்டவனுக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். அன் றைய பாடங்களை அன்றைய தினமே படித்து எழுதிப் பார்த் தால் வெற்றி நிச்சயம். மதிப் பெண்கள் குறைவாக எடுத் தால் பிள்ளைகளை பெற் றோர் கண்டிக்காமல் அடுத்த முயற்சிக்கு ஊக்கப்படுத்த வேண்டும். தேர்வு குறித்து யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி நன் றாக படித்து எழுதினால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். நான் டாக்டராகி மருத்துவ சேவை யாற்றவே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதே பள்ளி மாணவி விஜய சரவண பிரபா 496 மதிப் பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித் துள்ளார். அவர் பெற்ற மதிப் பெண் விவரம் வருமாறு:- தமிழ்-98, ஆங்கிலம்-99, கணி தம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 99. மாணவி விஜய சரவண பிரபாவின் தந்தை கருப்பையா சுகாதா ரத்துறையில் ஓட்டுன ராகவும், தாய் தேவி குடும்ப தலைவி யாகவும் உள்ளனர். மாணவி விஜய சரவண பிரபா கூறிய தாவது:- எதைப்பற்றியும் கவ லைப்படாமல் அதிக மதிப் பெண் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு படித் தேன். இரவில் சிறிது நேர மும், அதிகாலையில் அதிக நேரமும் படித்து எழுதி பார்த்தேன். நான் எனது பெற்றோரின் விருப்பப்படி டாக்டராக விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் பிடித்த மாணவ- மாணவிகளை பள்ளி தாளா ளர் டாக்டர் செய்யதா, முதல்வர் ராஜமுத்து, நிர்வாகி இக்பால், துணை முதல்வர் சங்கரலிங்கம் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

ராமநாதபுரம் செய்யது அம் மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இஜாஸ் தஸ்பிகா 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வரு மாறு:- தமிழ்-99, ஆங்கி லம்-99, கணிதம்-100, அறி வியல்-99, சமூக அறிவியல்99. மாணவியின் தந்தை இஸ்மா யில் அத்தியூத்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தாய், ஷமீமா பர்வின் குடும்ப தலைவியாகவும் உள்ளனர். மாணவி கூறியதாவது:- எல் லாம் வல்ல இறைவனின் அரு ளாலும், பெற்றோர், பள்ளி நிர்வாகம், மற்றும் ஆசிரியர் களின் ஊக்கத்தா லும் அதிக மான மதிப்பெண் பெற முடிந் தது. இதற்கான அனைவருக் கும் நன்றி தெரிவித்து கொள் கிறேன். எங்களது பள்ளியில் அடிக்கடி நடத்திய தேர்வுக ளால் தவறுகளை திருத்தி என்னை தயார்படுத்திக் கொள்ள முடிந்தது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்து நான் டாக்ட ராக விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதே பள்ளி மாணவி மோனிசா496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ்-97, ஆங்கிலம்-99, கணிதம்-100 அறுவியில் 100, சமூக அறிவி யல் 99. மாணவியின் தந்தை பாஸ்கரன் மெட்டல் வியாபா ரமும், தாய் மஞ்சுளா குடும்ப தலைவியாகவும் உள்ளனர். மாணவி மோனிசா நிருபர்க ளிடம் கூறியதாவது:- அதிக மதிப்பெண் பெற்றது மகிழ்ச் சியை அளிக்கிறது. அனைவ ரின் ஊக்கத்தாலும் நான் கடின முயற்சி மேற்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் படித்தேன். பள்ளி நிர்வாகம் என்னை மிகவும் நம்பிக்கை யுடன் எதிர்பார்த்து பயிற்சி அளித்தனர். அவர்களின் நம் பிக்கை வீண் போகவில்லை. நான் டாக்டராகி கிராம மக் க ளுக்கு சேவையாற்ற விரும் பு கி றேன். இவ்வாறு அவர் கூறி னார். இதேபள்ளி மாண வன் சிவரஞ்சித் 496 மதிப் பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித் துள்ளார். அவர் பெற்ற மதிப் பெண் விவரம் வருமாறு:- தமிழ்-99, ஆங்கிலம்-99, கணி தம்-100, அறிவியல்-100, சமூக அறிவி யல்-98. மாண வரின் தந்தை காந்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் சண்முக ராணி குடும்பத் தலைவி. மாணவர் சிவரஞ்சித் கூறியதாவது:- இரவில் படிக்காமல் அதிகாலையில் எழுந்து படித்ததால் மனதில் எளிதில் பதிந்து தேர்வை எளிதாக எழுத முடிந்தது. பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவரையும் கவனமாக பார்த்து பயிற்சி அளித்தனர். சிறுவயது முதலே விஞ்ஞானி யாக வேண்டும், புதிது புதி தாக கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனவே நான் விமான இயல் துறையில் விஞ்ஞானியாக விரும்புகி றேன். இவ்வாறு அவர் கூறி னார். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளள் ராஜாத்தி அப்துல்லா, பள்ளி முதல் வர் நாகலட்சுமி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டினர்.

12 பேர் 3வது இடம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேசுவரி 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப் பெண் விவரம் வரு மாறு:- தமிழ்-97, ஆங்கிலம் -98, கணிதம்-100, அறிவியல் -100, மாணவியின் தந்தை ராஜேந்திரன் திருப்புல்லாணி சிக்கன நாணய கூட்டுறவு சங் கத்தில் செயலாளராக உள் ளார். தாய் கலா மாயாகுளம் நேருஜி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மாணவி புவனேசுவரி கூறிய தாவது:- எஸ்.எஸ்.எல்.சி. தேர் வில் 498 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று முயற்சி செய்தேன். எனது பள்ளி நிர் வாகத்தின், ஆசிரியர்கள், மற் றும் பெற்றோர் மிகவும் ஊக் கமளித்தனர். அதிக தேர்வு கள்தான் என்னை தயார்ப டுத்த உதவியது. எனக்கு மற்ற வர்களை போல அல்லாமல் இரவில் தான் அதிக நேரம் படிப்பேன். பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்து டாக்டருக்கு படித்து இருதய நோய் நிபுணராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாணவி புவனேசுவரியை பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, தலைமை ஆசிரியர் ஹாஜாமைதீன் மற் றும் ஆசிரியர்கள் பாராட்டி னர். இதேபோல ராமநாதபு ரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவி பாரதி 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். அவரை பள்ளி தாளாளர் ஜெயக்குமார், முதல் வர் சீனிவாசலு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

இவர்கள் தவிர ராமநாத புரம் மாவட்டத்தில் குஞ்சார் வலசை ராஜா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி அப் ரின் பாபிதா 496 மதிப்பெண் களும், ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவி விசாலினி 496 மதிப்பெண்க ளும் பெற்று 2ம் இடம் பிடித் துள்ளனர். மேலும் செய்யது அம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி அப்ரின் பாத் திமா, மோனிசா பிரியதர்சினி, பிரகாஷ்ராஜ், சுஜிதா, அரசி, வர்ஷா, பரமக்குடி டான் போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் ஹரீஸ் வசந்தன், யோகேஷ் குமார், நேசனல் அகாடமி பள்ளி மாணவிகள் கிருத்திகா, ஷிவானி, சுபி அக்சயா, பரமக் குடி ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதிபா ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளனர். ராமநா தபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவி மாவட்ட அள வில் முதலிடத்தையும், 8 பேர் மாவட்ட அளவில் 2ம் இட மும், 12 பேர் மாவட்ட அள வில் 3ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Tags: , , , , , ,

Leave a Reply