10ம் வகுப்பு தேர்வில் 98.16 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் 3வது இடம் ராமநாதபுரம் மாவட்டம் சாதனை

ராமநாதபுரம் மாவட்டம் 10ம் வகுப்பு பொதுதேர்வில் 98.16 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 248 பள்ளிகளிலிருந்து 8 ஆயிரத்து 814 மாணவர்கள், 9 ஆயிரத்து 165 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 979 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 590 மாணவர்கள், 9 ஆயிரத்து 58 மாணவிகள் என 17 ஆயிரத்து 648 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 98.16. கடந்தாண்டைவிட இந்தாண்டு 1.06 சதவீதம் கூடுதலாக பெற்று மாநில அளவில் 3வது இடத்தை பெற்றது.   கடந்தாண்டு 97.10 சதவீதம் பெற்று மாநில அளவில் 4வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 248 பள்ளிகளில் 157 பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.  கடந்தாண்டை விட இந்தாண்டு 26 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.  இதில் அரசு பள்ளிகள் 83, அரசு உதவிபெறும் பள்ளிகள் 29, மெட்ரிக் பள்ளிகள் 45.  கடந்த ஆண்டை விட 18 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்
றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: , , , ,

Leave a Reply