இப்னு பதூதா

Vinkmag ad

இப்னு பதூதா (25th பிப்ரவரி 1304) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர் பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கு அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன. இவர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா,இந்தியத் துணைக் கண்டம், ஆசியா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மொராக்காவில் 1304 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார். தனது 20 ஆம் வயதில் இபின் பதூதா மெக்காவிற்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணமே அவரை உலக நாடுகளுக்கு இட்டுச் சென்றது.
இபின் பதூதா மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும்போதே இதுவரை தான் அறியாத நிலப்பரப்புகளையும் பல்வேறு வகையான கலாச்சாரக் கூறுகளையும் அறிந்துகொள்ளத் துவங்கினார். உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய அரசர்களை நேரில் கண்டு வரவேண்டும் என்ற ஆசை உருவானது. இதனை வெளிகாட்டாமல் மெக்காவில் தன்னோடு நெருக்கமாக இருந்த வணிகர்கள் மற்றும் கடலோடிகளோடு சேர்ந்துகொண்டு தனது பயணத்தைத் துவக்கினார்.
Ibn Battuta சென்ற நாடுகளில் சில
Over his lifetime Ibn Battuta traveled over 73,000 miles (117 500 km) and visited the equivalent of 44 countries.
Cairo, Alexandria, Jerusalem, Hebron, Damascus, Egypt, Syria, Medina, Jeddah, Mecca, Oman, Bahrain, Yemen, Qatif, Spain, Granada, Konya, Bulgaria, Constantinople, Central Asia, South Asia, North India, Sindh (Pakistan), India, China, Southeast Asia, Burma, Sumatra Indonesia, Malay Peninsula Malaysia, Somalia, Mali Empire and West Africa, Timbuktuசொந்த நாடு திரும்புதல்:
முப்பது ஆண்டுகள் பயணத்தில் எதேதோ நகரங்களில் நோயுற்றும் பிடிபட்டும் கப்பல் விபத்திற்குள்ளாகியும் மோசமான உடல்நலக் கேட்டிற்கும் உள்ளான இபின் பதூதா முடிவாகத் தனது சொந்த நாடு திரும்பினார். அவருக்கு சுல்தான் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாஸ் என்ற நகரில் வசிப்பதற்கான உதவிகள் செய்தார்.

 

News

Read Previous

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

Read Next

நபி பெருமான் வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *