ஹைக்கூ

—— அபிநயா

 

சென்றியு

பூச்சிமருந்துகுடிக்கவிதவிதமாய் விளம்பர தூதர்கள்அயல்நாட்டு குளிர்பானம்! கந்தையானாலும் கசக்கிக்கட்டியவர்கள்கிழிந்ததையும் களிப்புடன்கட்டிக்கொண்டனர்அயல்நாட்டு அலங்கோலம்!

பழமொன்றியு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
நன்றாகவே நடிக்கின்றோம்!

ஆயிரம்முறை போய் ஒரு கல்யாணத்தை பண்ணனும்
துப்பறியும் நிறுவனத்தின் துணையுடன்!

லிமரைக்கூ

கள்வர்களும் கல்வித் தந்தையோ
பணம் பிடுங்கும் சொகுசு கூடாரத்தால்

ஏற்பட்ட புரியாத விந்தையோ!

மருத்துவர் திறக்கும் புறக்கண்
லட்சமே நோக்கம் என்பதால் பயன்தரும்
ஆசான் திறக்கும் அக்கண்

உச்சம் தொட்ட கோபக்கணை
சேட்டையை சமர்த்தாக அணைத்தாய் அன்பின்
உச்சி முகர்ந்த முத்தகணை

இயற்கையின் இன்றியமையா பங்குசெயற்கை உறைகூழிடம் சீரழிவு பெறாதுநலம் நாடிட நுங்கு

 

 

 

ஹைபுன்

காதலர்களும்,திருமணமானவர்களும் சில சூழ்நிலைகளினால் பிரிந்து வாழ நேரும் பொழுது தான் தங்கள் காதலின் ஆழத்தையும் காதலரின் மீதான அன்பையும் உளமாற உணர்ந்து கொள்கிறார்கள்.இலக்குகளையும் இலட்சியங்களையும் அடைவதற்கும் காதல் உற்சாகத்தையும் ,ஊக்கத்தையும் அள்ளிஅள்ளித் தரவல்லது.

பிரிந்த சிறகுகள்
பறவைகள் வானம் தொட
தற்காலிகப் பிரிவு!

 

லிமர்புன்

புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தெரியாதயவருக்கும் ,தூரத்து உறவினருக்கும் நெருங்கிய சொந்தங்களாகவும்,பழக்கப்பட்டவராகவும் அறியப்படுகிறோம்.அதுவே புகழ் குன்றுபட்ட வேளையில் நன்கு அறிந்த சொந்தங்களும் நம்மை அறியாதவர் என்பர் தூரத்து உறவும் நெருங்குமேநெருங்கிய உறவும்  விலகி ஓடபுகழின் கண்ணாமூச்சி ஆட்டமே!

 

 

ஜாதி,மத,இனம் என்ற பலமுட்களுக்கு நடுவே காதல் பூ பூத்து நறுமணம் வீசும்பொழுது,அப்பூக்களை அன்பெனும் நூலில் அழகாக திருமண மாலையாக்குவதும்,பூக்களை நசுக்கி எரிவதும் பெற்றோர் கையிலேயே உள்ளது. காதல் சேர்க்கும் இருமனம்ஆணவம் அழித்து அன்புடன் பெற்றோர்செய்து வைக்கும் திருமணம்

 

 

 

மகிழ்வூட்பா

நண்பர்கள் ஒன்று கூடல்

நெஞ்சில் மகிழ்ச்சிக் கடல்

பறவையாய் பறந்த மனம்

பிரிகையில் மனதில் கனம்

 

Tags: 

Leave a Reply