ஹைக்கூ

ஊருக்கு விருந்து வைத்தபின் வைக்கிறது உலை தீக்குச்சி!

 

மானம் காப்பதற்கும் மானமிழந்தால் கோர்ப்பதற்கும் ஒற்றை முடிச்சு

 

மணந்தால் மறப்பதுவும் மணக்காவிடில் மறக்காததும் தான் மனிதக் காதல்

 

 

உணவின் முடிவாக்கி மறுவுலகின் துவக்கமாகும் விதிக்கப்பட்ட மரணம்

 

ஊரை இணைத்துவிட்டு

ஊரையே பிரித்து வைக்கும்

கோடுகள் தெருக்க:ள்

 

பிறரைக் காப்பதால்

தன்னையும் பாதுகாக்கும்

நெறியே தர்மம்

 

 

 

குழந்தைக்கு வந்ததை

நிறுத்திய பொம்மையை மறந்த

குழந்தைக்காக அழுகை

 

 

 அதிரை கவியன்பன்கலாம், அபுதாபி

Tags: 

Leave a Reply