ஹார்வர்டு தமிழ் இருக்கை – எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி!

ஹார்வர்டு தமிழ் இருக்கை – எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி!
******
ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வழங்கினார். அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, அச.உமர் பாரூக், ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம் மற்றும் பஷீர் சுல்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி; “தமிழுக்கு இருக்கை அமைக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்ததன் மூலம், 2500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் தொன்மை குறித்து உலக மக்கள் அறியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன் மூலம் தமிழை ஆய்வுமொழியாகக் கொண்டு, ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள், ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளின் மூலம் தமிழ் மொழியின் தொன்மை உலகறியச் செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நிதியுதவி அளிக்க தமிழக அரசு கோரியிருந்தது. பல்வேறு தரப்பினரும் தங்களின் சார்பாக நிதியுதவி அளித்த நிலையில், எஸ்.டி.பி.ஐ. சார்பாக கட்சியின் நிர்வாகிகளின் பங்களிப்பின் மூலம் ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜன் அவர்களிடம் வழங்கினோம்.

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய முயற்சி செய்த மற்றும் அதற்காக நிதியுதவி அளித்த அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply