ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் தேர்வு

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று கூறியதாவது: ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி செலுத்த வேண்டும். இதில் தமிழக அரசு ரூ.10 கோடியை தன் பங்காக அளித்துள்ளது. அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த 6,800 பேர் நிதி அளித்துள்ளனர். இதுவரை ரூ.36 கோடி ரொக்கமாக கிடைத்துள்ளது. சிலர் ரூ.2 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். மீதம் தேவைப்படும் ரூ.2 கோடியில் ரூ.82 லட்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

எஞ்சிய தொகை இன்னும் 2 வாரங்களில் கிடைக்கும். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவ தும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடக்கும் தமிழ் தொடர் பான ஆராய்ச்சிகள் குறித்துஅறிந்துகொள்ள ஆராய்ச்சி நுழைவாயில் அமைக்க தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பான முடிவுகள், மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு முடிவுகள் பெறப்பட்டு, தொல்லியல் துறைக்காக புதிய இணையதளம் தொடங்கப்படும். தமிழில் 2,500 புதிய வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அரசாணையாக வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply