ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா : ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உபயோகப்படுத்திய புத்தகங்கள் வீணாகிவிடாத வகையில் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிட ஆர்வம் காட்டினர்.
இதன் மூலம் தங்களது பொருளாதார சுமை குறைந்துள்ளது எனவும் தெரிவித்தனர். இதற்கு நல்ல ஆதரவு இருந்து வருவதால் தொடர்ந்து இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Tags: , , ,

Leave a Reply