ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் அல் கஸ்பா பொழுது போக்கு மையம்

1 (3)ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் அல் கஸ்பா பொழுது போக்கு மையம்
ஷார்ஜா :
ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் வகையில் அல் கஸ்பா பொழுது போக்கு மையம் திகழ்ந்து வருகிறது. இந்த இடத்தில் இசையுடன் பீறிட்டு கிளம்பும் வகையில் நடனமாடும் நீரூற்று இருந்து வருகிறது. குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டுக்கள் இருப்பதால் இங்கு வரும் குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மிகப்பெரிய ராட்டினம் ஷார்ஜாவின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அருகில் படகு போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு நாவிற்கு இனிய உணவகங்கள் இருப்பதால் இங்கு உண்டு மகிழ பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இங்குள்ள கட்டிடக் கலையானது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
Tags: ,

Leave a Reply