ஷார்ஜாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழா

scrf5ஷார்ஜா : ஷார்ஜாவில் குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழா ஆறாவது ஆண்டாக இவ்வாண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை சிறப்புற நடைபெற்றது.
ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழாவினை திறந்து வைத்தார்.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் வாசிப்பிற்கென தனியாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை என நூலகத்துறை இயக்குநர் ஹைஃபா அல் தர்விஷ் தெரிவித்தார். எனினும் கல்வித்துறை வாசிப்பிற்கென நேரம் ஒதுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இக்கண்காட்சியில் 17 நாடுகளைச் சேர்ந்த 124 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாழ்க்கைக்கான நண்பர்களைக் கண்டறிவோம் எனும் தாரக மந்திரத்துடன் இந்த வாசிப்புத் திருவிழா வெற்றிகரமாக நடந்தேறியது.

 

Tags: , , ,

Leave a Reply