ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !

 

பேராசிரியர் திருமலர் மீரான்

 

பனிரண்டு

மாதங்களில்

ஒரு தடவை பூக்கும்

ஷவ்வால்

தலைக் குறிஞ்சியே !

 

மனதில்

மகிழம் பூச் சொரியும்

ஈதுல் ஃபித்ரின்

இனிய நாளில் மலரும்

இளம் பிறைக் குறிஞ்சியே !!

 

இறை யுணர்வின்

வாசம் வீசும்

உந்தன்

நறுமணத்தைச்

சுவாசிக்கவே

ஈமா னென்னும்

இறை விசுவாசத்துடன்

முப்பது நாட்கள்

நோன்பிருந்தோம் !

 

வர்ணத்தைத்

தரிசிக்கும்

தருணம் நோக்கியே

தஸ்பீஹ் மணிகளுடன்

வேதம் வந்த

மாதம் முழுவதும்

தவ மிருந்தோம் !

 

அகம்

பாவச் செயல்கள்

புறம் போக

ரமலானில்

தீமை

பொசுக்கினோம் !

 

முப்பது நாட்களாய்

இறை வணக்கச்

செயல் சிறந்த

நோன்பின் ஜ்வாலையில்

எங்களையே

புடம் போட்டோம் !

 

ஜகாத்

சதக்கா

உரமிட்டோம் !

நல் அமல்கள்

நீர் பாய்ச்சினோம் !!

தக்வா என்னும்

வேலி வளர்த்தோம் !!!

 

எங்கள்

மர மனங்களை

மலர் மனமாக்கி

மகரந்தம் சிந்தி

ரஹ்மத்தினைக்

கருவுயிர்க்க வந்த

மகா புஷ்பமே !

 

நன்றி :

மதிநா மதிநா இதழ்

மே 90

Tags: ,

Leave a Reply