வெளிநாட்டு வேலைக்கு ஆக.30 ல் நேர்முகத்தேர்வு

ராமநாதபுரம் : குவைத், ஓமன் நாடுகளில் வேலை பார்க்க விரும்பும் இளைஞர்கள், திருச்சியில் வரும் ஆக.,30 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.குவைத்தில் இந்திய தொலை தொடர்பு திட்டப் பணிகளுக்கு கேபிள் பொருத்துதல், மண் தோண்டுதல் ஆகிய வேலைகளுக்கும், கனரக வாகன ஓட்டுனர் (உரிமம் பெற்றுள்ளவர்கள்) பணிக்கும், ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் இயந்திரம் இயக்கும் (மெஷின் ஆப்பரேட்டர்) பணிக்கும் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ள 22 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வானவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், தங்கும் இடம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதி உடையவர்கள் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆக., 30 ல் நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

மேலும் தகவலுக்கு 044-2250 2267, 2250 5886, 082206 34389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply