விவேகானந்தம்150- ஓர் அறிமுகம்

ஒரு புதிய இணையதளம் – விவேகானந்தருக்கு சமர்ப்பணம் 

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டினை முன்னிட்டு, நாடு முழுவதும் எழுச்சி மிகு கொண்டாட்டங்கள் 2013, ஜனவரி 12 -இல் துவங்கி நடந்து வருகின்றன. இந்தக் கொண்டாட்டங்களை இணையத்தில் பதிவு செய்யவும், சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளை தினசரி பிரசுரிக்கவும், ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.

தேசிய சிந்தனைக் கழகத்தின் முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த இணைய தளத்தில், தமிழகத்தின் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் படைப்புகளும் வெளியிடப்பட உள்ளன.  விவேகானந்தர் 150-வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளும், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளும், அரிய படங்களும் இத்தளத்தில் வெளியாகின்றன.

சுவாமி விவேகானந்தரின் 150 -வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு ஓர் அற்புதமான காணிக்கையாக இந்த இணையதளம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு படைப்புகள், செய்திகள், பொன்மொழிகள், படங்களை வழங்கி, தேசப் பணியில் அனைவரும் பங்கேற்கலாம்.

இத்தளத்தின் முகவரி: http://vivekanandam150.com

Tags: ,

Leave a Reply