விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம்

விரதத்தின் நாட்கள் !

வீணான எண்ணங்கள்

விலங்கிடப் படட்டும் !

விரும்பத்தகாத வார்த்தைகள்

விரட்டியடிக்கப் படட்டும் !

கருணையும், சாந்தியும்

கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் !

பொறுமையும், அன்பும்

பிறர்மீதும் பரவட்டும் !

வறுமையின் கோரம்

வறியவர் மட்டுமன்றி

வசதி படைத்தவரும் அறிய

வரையறுப்பதுதான் நோன்பு !

அதை

நேராய்க் கொள்வோம் !

நேர்மையின்

வேராய்க் கொள்வோம் !

வசந்தம் நம்

அனைவர் வாழ்விலும்

சுகந்தமாய் வரவட்டும் !

அன்புடன்

மு. பஷீர்

பஷீர் முகமது, மஸ்கட்.

basheer.mohammed@gmail.com

Tags: , ,

Leave a Reply