விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு! – மு.இளங்கோவன்

 

அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்!

தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் பணிகளை நிரல்படுத்தி – நிலைப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு வழங்கும் என் உழைப்பைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அந்த வகையில் தமிழுக்கு உழைத்த தவத்திரு. விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றைக் கடந்த ஓராண்டாக உழைத்துத் திரட்டி, ஆவணப்படமாக்கி உலகிற்குத் தர உள்ளேன்.

2017 செப்டம்பர் 16 காரி(சனி)க்கிழமை மாலை 6 மணிக்குப்புதுச்சேரியில் அமைந்துள்ள செயராம் உணவகத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிஞர்கள் முன்னிலையில் வெளியீடு காணவும் திரையீடு காணவும் உள்ளது.

 

மக்கள் தொலைக்காட்சியின் மாண்புக்குரிய முதன்மைச் செயல் அதிகாரி

சீர்மிகு சௌமியா அன்புமணி அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, அறிஞர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

உழைப்பில் மலர்ந்த – வியர்வையில் பூத்த இந்த ஆவணப்படத்தைக் கண்டு மகிழ, உங்களை உவகையுடன் அழைக்கின்றேன்.

தூரத்தில் இருப்பவர்கள்

உங்கள் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்

ஈர வாழ்த்துகளை எனக்கு அனுப்புங்கள்.

அஃது அடுத்த படத்திற்கு

உழைக்கும் ஆற்றலை எனக்குத் தரும்.

 

பணிவுடன்

மு.இளங்கோவன்

புதுச்சேரி, இந்தியா

 

இடைக்கட்டு மு.இளங்கோவன்

Dr.Mu.Elangovan

Assistant Professor of Tamil

  1. M. Centre for Postgraduate Studies,

Government of Puducherry,

Puducherry-605 008, India

E.Mail : muelangovan@gmail.com

blog: http://muelangovan.blogspot.com

cell: +91 9442029053

Leave a Reply