“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”!

 

 sadam
                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

ஒரு காலத்தில் உலகமகா ரவுடி அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஈராக் நாட்டின் மாவீரன் சதாம் ஹுஸைனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா ராணுவம் கொடுத்துள்ள விலை குறைவானதல்ல,
ஆனாலும் அதற்கான நஷ்ட ஈட்டினை 2006லிருந்து தொடர்ச்சியாக 2013 இறுதிவரை ஈராக் நாட்டின் எண்ணெய் வளத்தில் 90%வரை கொள்ளையடித்து விட்டு தமது ராணுவத்தை விலக்கி கொண்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் கொலை மற்றும் கொள்ளை பார்வை பதிவு செய்யப்பட்ட முக்கிய நாடுகளில் ஈராக்,ஈரான்,சவூதி அரேபியா,குவைத்,சிரியா,லெபனான் போன்றவையாகும்.
இவற்றுக்கு ஒரே காரணம் அந்த நாடுகளில் இருந்த விலை மதிக்க முடியாத எண்ணெய் வளங்களே.
இதில்  ராஜ தந்திரத்தின் மூலம் சவூதி அரேபியா,குவைத் நாடுகளை தமது இழுப்புக்கு இசைவாக்கியது அமெரிக்கா.
அமெரிக்காவின் இத்தகைய ரவுடித்தனத்தை பகிரங்கமாக எதிர்த்தவர்களில் சதாம் ஹுஸைனும் ஒருவர்.சதாம் ஹுஸைனை வீழ்த்துவதற்கு ஈராக் நாட்டின் எட்டப்பன்களாய் இருந்த குர்து மற்றும் ஷியா கலாச்சாரம் சார்ந்த ஒருசிலரை விலை கொடுத்து வாங்கிய அமெரிக்கா,
எட்டப்பன்களின் உதவியுடன் 2003ல் ஈராக்கின் மீது நியாயமற்ற போர் தொடுத்து சதாமையும் கைது செய்து அவருடன் அந்நாட்டு போராளிகளையும் கைது செய்து பல்வேறு வழக்குகள் போட்டு,அவர்களுக்காக தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்திய அமெரிக்கா,
தனது அபிலாசைகளில் ஒன்றான சதாமின் மரணத்தை குர்து எட்டப்பன் ரவூப் அப்துல் ரஹ்மான் என்பவரின் மூலம் செயல்படுத்திக்கொண்டது.
சதாமுக்கு எதிரான வழக்கை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், தனது எஜமான் அமெரிக்கா சொல்லி கொடுத்தது போல் 2006ல் மாவீரன் சதாமுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.
தீர்ப்பின் முடிவு இதுவாகத்தானிருக்கும் என்பது நமக்கு மட்டுமல்ல,சதாமுக்கும் தெரியும்.ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்றிய விதம்தான் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2006ல் முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஹஜ்பெருநாள் அன்று காலையிலேயே சதாமை தூக்கில் போட்டுவிட்டு,இந்த வருட அமெரிக்காவின் குர்பானி இதுதான் என்று கொஞ்சம் கூட ஈவு,இரக்கமில்லாமல் எள்ளி நகையாடிய உலுத்தர்களின் கூட்டத்திற்கு அது ஆனந்தமென்றாலும்,ஈரமுள்ள நெஞ்சத்தோருக்கு அது துயரமாகவே இருந்தது.
இதற்கான எதிர்மறை உலகில் உண்டு என்பதை தற்போதைய ISIS போராளிகளின் மூலம் இறைவன் நிரூபித்துவிட்டான்.
சதாமை அநியாயமாக தூக்கிலிட்ட ஈராக் நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் என்ற நயவஞ்சகன் ISIS போராளிகளால் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட செய்தி சொல்லும் பழமொழி இதுதான்,”வினை விதைத்தவன் வினை அறுப்பான்”.
Tags: , ,

Leave a Reply