விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

( த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு ஹிதாய‌த்துல்லாஹ், இளையான்குடி )
அலைபேசி : 99 763 72229
*க‌ச‌ங்கிக் கிட‌க்கிற‌தொரு
க‌விதை !
* ம‌ய‌ங்கிக் கிட‌க்கிறாள் ஒரு
மாது !
* என்ன‌ கார‌ண‌ம் ?
* பிர‌ச‌வ‌ யுத்த‌த்தில்
வலியோடு போராடி …
க‌ளைத்துக் கிட‌க்கிறாள்
ஒரு ச‌கோத‌ரி !
*த‌ன் ப‌த்துமாத‌
வித்தை
முத்தாய் த‌ந்துவிட்டு
எழ‌முடியாம‌ல்
ப‌டுத்திருக்கிறாள் !
* அவ‌ள் உட‌ம்புக்குள்ளே …..
ஆயிர‌ம் ஊசிக‌ளின் தாக்குத‌ல் !
* புய‌ல் மைய‌ம்
கொண்டிருப்ப‌து போல‌,
வ‌லி
மைய‌ம் கொண்டிருந்த‌து !
*பாவ‌ம்
என்ன‌ செய்வாள் .. ?
அந்த‌ச் சின்ன‌ப்பெண் !
*ஆம்
*ம‌ருத்துவ‌ம‌னை
பிர‌ச‌வ‌ வார்டில் …
தைத்துக் கிட‌ந்த‌தொரு
தாம‌ரை
*பிரசவம் என்பது
பெண்ணுக்குச் சுகமா …?
சுமையா …?
*பிரசவம் என்பது
பெண்ணுக்கு
வாழ்வா …? சாவா ..?
இனிப்பா..  ? கசப்பா .. ?
*இப்படியெல்லாம்
பல நிலைகளில்
எண்ணத் தோன்றுகிறது !
*பிரசவிக்க
இடுப்பு வலி வரும்போது
அம்மா….யென்று
அந்தப் பெண் அலறும்
சத்தம்
அவள் தாயின்
கர்ப்பச் சுவரிலும் …….
எதிரொலிக்கிறது.
*இறைவன் படைப்பினில்
பெண்ணுக்கு மட்டுமேன்
தாங்க முடியாத …  வலி
* வலியின் மகளோ .. பெண் ?
வலியின் வார்த்தையோ … பெண் ?
* மகளுக்கு
மருத்துவமனையின் உள்ளே
பிரசவம் !
* வெளியே இருக்கும்
தாய்க்கோ
மகளின் பிரசவம் குறித்த
வலி !
முகத்தில் ஒருவிதபயம்
அப்பிக் கொண்டிருக்கும் !
*ஒரு படபடப்பு
*பதறும் படப்பிடிப்பு !
*எது எதற்கொல்லாமோ
தீர்வு கண்ட விஞ்ஞானம்
எது எதற்கோ
விடை சொல்லும் விஞ்ஞானம்
ஒரு பெண்
அதிக வலியில்லாமல்
பிரசவிக்க
வழிமுறை கண்டதுண்டா ..?
*சிலருக்கு
பிரசவிக்க
வலி வரவில்லையே .. என்ற
வலி !
*இந்த முரண்பாட்டின்
முடிச்சுக்கு …
விஞ்ஞானமே ..
உன் விடையென்ன ..?
*காத்திருக்கிறோம்
Tags: , ,

Leave a Reply