விஐடி பல்கலைக்கழகத்தில் உருது பாடப் பிரிவு தொடங்கப்படும்

விஐடி பல்கலைக்கழகத்தில் உருது பாடப் பிரிவு தொடங்கப்படும் என்று வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியின் உருதுத் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் எஸ்.ஜியாவூதீன் அகமத் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் எஸ்.ஒய். அன்வர் செரீப் வரவேற்றுப் பேசினார்.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக  ராஜேந்திர பிரசாத் இருந்தபோது நடத்திய ஓட்டெடுப்பில் ஹிந்தியும், உருதும் சம ஓட்டு பெற்றது. உருது மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. விஐடியில் உருது, அரபிக் பாடப்பிரிவுகள் விரைவில் துவக்கப்படும் என்றார் அவர்.

இந்தக் கருத்தரங்கில் சென்னை புதுக்கல்லூரியின் தாளாளர் முஹம்மத் அஸ்ரப்,சென்னை பல்கலைக்கழக அரபிக் துறைத் தலைவர் சையது சாஜித் உசைன், கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமத், கல்லூரியின் உருதுத் துறைத் தலைவர் எஸ்.முஹமத் யாசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதன், வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பலர் உருது மொழி குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்தனர்.

Tags: , ,

Leave a Reply