வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்வாங்கு வாழ்தல்  
 
முறையான வாழ்க்கையும்  -நேர் 
மறையான எண்ணமும்  
அறவழி  நிற்றலும் 
அருள்மொழி கற்றலும் 
பிறர்மனம் நோகா 
முறையினிலுரைத்தலும் 
பிறர்பொருள் விழையும்  
பிறழ் நெறி அகற்றலும்
 
மடமையைக் கொய்தலும் 
கடமையைச் செய்தலும் 
பொறுமையைக் காத்தலும் 
பொறாமையகற்றலும் 
சிறுமை தவிர்த்தலும் 
பெருமையை நல்குமே .   
 
ஆத்திகராயினும் 
நாத்திகராயினும் 
அகமதில் தூய்மை 
சுகமது நல்குமே . 
 
வையந்துளோர்க்கு நாம் 
உதவிடல் வேண்டும் 
வையத்துளோர் நம்மைப் 
போற்றிடல் வேண்டும் 
வையத்துள்  வாழ்வாங்கு 
வாழ்ந்திடல் வேண்டும் 
வையத்துளோர் மனதில் 
வாழ்ந்திட வேண்டும். 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

Leave a Reply