வானவில்

வாவில்

வானச் சாசனம்

….வர்ணப் பாசனம்

வேனல் இயற்கையின்

…..விரிமயில் ஆசனம்

ஊஞ்சல் மோகனம்

….ஓளிவில் வாகனம்

தீஞ்சொற் கவிதையின்

….திசைமகள் சீதனம்

சொர்ண மாளிகை

….சுந்தரத் தூளிகை

வர்ணப் பீடமேல்

….வான்மகள் ஆளுகை

நவமணிப் பட்டியல்

….நளினமின் வெட்டியல்

குவைமணிச் சரடெனக்

…..கோத்தபொன் அட்டியல்

கதம்பத் தோரணம்

….கவர்ச்சிப் பூரணம்

விதம்பல செய்திடும்

….வேடிக்கை காரணம்

வரையாச் சித்திரம்

….வல்லோன் செய்திறம்

அரையாய் வளைந்தவில்

…..அம்பில்லை; பத்திரம்

-அதிரை கவியன்பன் கலாம்,அபுதாபி

 

Tags: 

Leave a Reply