வர்மம்

வர்மம்

டாக்டர் . S. சேக் முகம்மது, M.A.,M.A.,Ph.d., R.I.M.P., R.A.M.P.

சித்த வைத்தியத்தின் பெருமைகள் ஒன்றாக வர்மம் வைத்தியம் அமைந்துள்ளது. இக்கலையை மர்மமாக அதாவது ரகசியமாக வைத்து இருப்பதை வர்மம் என அழைக்கப்படுகிறது. ஞான ஒளி சித்தர்கள் தங்களின் ஞானத்தின் மூலமாக அறிந்து மக்களுக்கு பயன்படுமாறு அருளியுள்ளனர். ஞான சித்தர்களில் அகஸ்தியர், போகர் போன்ற பெருமகனார்கள் வர்மத்தைப் பற்றியும் அதன் சிகிச்சை முறைகளைப் பற்றியும் வரையறுத்துள்ளார்கள்.

பெரியவர், பெண்டீர், ஏழைகள், விதவைகள், நல்லவர்கள் ஆகியோர்களுக்கு இக்கலையால் தீங்கு ஏற்படாமல் இருக்க மறைத்து வைத்து இருப்பதால் வர்மமாக மாறிவிட்டது என்றும் கூறலாம். இக்கலையை கற்பவர்கள் ஒழுக்கத்துடனும் ஆணவம், பகை மற்றும் தீய குணங்களை நீக்கி பயின்று நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும்.

பிராமணம் என்ற சக்தி நிறைந்துள்ள அமிர்த நிலைகள் உடலில் உள்ளன. அந்த இடங்கள் வர்மங்கள் நிறைந்த பகுதியாகும். தசைநரம்பு, தகிரங்கள், நரம்புகள், என்புகள், உடல் மூட்டு பகுதிகள் வசிகள் போன்றவையாகும்.

குத்து, தட்டு, வெட்டு, இடி போன்ற தாக்குதல்களும் செய்வதனால் அந்த இடங்களில் வலி, வீக்கம், இரத்தம் வெளியேறுதல் போன்றவைகள் ஏற்பட்டு தடுமாறி, வியர்வை மற்றும் உடலின் உஷ்ண நிலை அதிகரித்தும் சளி மீறிட்டு ஜன்னி ஏற்பட்டு உணர்வு இழந்து மரணம் சம்பவிக்கும்.

அது பற்றிய முழுவிபரங்களையும் போகர் வர்ம சூத்திரம் 131, வர்ம உரை நூல் வர்ம நுட்பம், வர்மக்கை முறை ஏடு ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம், சர்வாங்கவர்மம் என பிரிக்கலாம் இருப்பினும் அசம்பாவித விபத்தில் வருவது படுவர்மம் நமக்குத் தெரியாமல் பிறர் மூரம் ஏற்படுவது தொடுவர்மமாகும்.

உடலின் பகுதியை 6 பிரிவாக பிரித்தும் அதில் மொத்தம் 108 வர்மங்களாகும். அதில் படவர்மம் 12 தொடுவர் மட்ம 96 ஆகும். இதில் பெண்களுக்கு 107 வர்மம் உள்ளன.

இவ்வாறு இருக்கும் வர்மம் உடலின் மேல்

சிரசில்                              25

கண்டத்திலிருந்து உந்தி வரை        45

தொப்புள் வரை                       9

கையில்                             14

காலில்                              15

ஆக மொத்தம்                       108 ஆகும்.

வர்மத்தால் பாதிக்கப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கவனியாது விட்டு விட்டால் மரணம் சம்பவிக்கும். சில வேளைகளில் சரியாகக் கவனிக்காவிட்டால் பசிமந்தம், உடல் உறுப்புகள் கேடடைந்து காசநோய், சயம், ஆஸ்துமா, எலும்புருக்கி, அஸ்திசுரம், கண்மங்கள், காதுமந்தம் போன்றவை ஏற்படும்.

 

வர்மம் ஏற்பட்டால் தெரியாது அதன் நாடிநிலை, தொடுகுறி, அறிகுறிகளை அறிந்து செயல்பட வேண்டும்.

எவ்வாறு அடிபட்டு மயங்கி விழுந்தாரோ அதைப்போன்று மீண்டும் நரம்புகளை இயக்கி எழுப்பி சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்.

இதற்கு சித்த மருத்துவத்தில் துவானை, நசியம் மருந்துகளை மென்று வாயால் மூக்கு காதுகளில் ஊதல், எண்ணெய், தைலம், நெய், மாத்திரை, சூரணம் போன்றவைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

 

( இராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு மலர் 2005 )

Tags: 

Leave a Reply