ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தலிலும் இந்திய தேசிய காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:

1951-வி.வி.ஏ.ஆர்.நாகப்ப செட்டியார், 1957.சுப்பையா அம்பலம், 1962-என். அருணாசலம்(மூவரும் இந்திய தேசிய காங்கிரஸ்) 1967-எஸ்.எம். முகம்து செரீப்(சுயேச்சை) 1971-மூக்கையாத்தேவர் (பார்வர்டு பிளாக்) 1977- பி. அன்பழகன்- அதிமுக 1980- எம்.எஸ்.கே. சத்தியேந்திரன்- திமுக 1984 1989 1991ஆகிய 3 தேர்தல்களிலும் காங்கிரûஸ சேர்ந்த வி. ராஜேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளனர்.1996-எஸ்.பி.உடையப்பன்- தமிழ் மாநில காங்கிரஸ். 1998- வி.சத்தியமூரத்தி- அதிமுக 1999- கே. மலைச்சாமி-அதிமுக 2004- எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன்- திமுக 2009-ஜெ.கே. ரித்திஷ்- திமுக.

தற்போது நடைபெற்ற 16 வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா திமுக வேட்பாளர் எஸ். முகம்மது ஜலீலை விட 1,19,324 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply