ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப்போட்டி

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்ச்சங்கத்தின் புரட்டாசி மாதாந்திரக் கூட்டத்தில் சிறுகதைப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  கூட்டத்துக்கு நல்லாசிரியர் செ.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவிஞர்.செ.மாணிக்க வாசகம், டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ் ஆகியோர் பேசினார். கவிஞர்கள் மகுடதீபன், சக்தி சேகரன் கவிதை வாசித்தனர். கவிஞர். மானுடப்பிரியன்  பேசினார். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் கருணாகரன், ராமச்சந்திரன்,காளீஸ்வரி ஆகியோர்  பாடல்கள் பாடினர். பேராசிரியர் செ.கிளிராஜ், சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பாக பாடிய பாடகர்களுக்கும் டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ் நினைவுப்பரிசு வழங்கினார்.

  சங்க உறுப்பினர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பலாம். போட்டிக்கான கதைகள் 10 பக்க அளவில் இருக்க வேண்டும். நவம்பர் முதல் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க செயலாளர் டாக்டர்.பொ.சந்திரசேகரன், துணைத்தலைவர் குழ.விவேகானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags: , ,

Leave a Reply