ராமநாதபுரம் கம்பன் கழக ஆண்டு விழா

ராமநாதபுரம் கம்பன் கழகத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கம்பன் கழகத் தலைவர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். அ.அன்வர் ராஜா எம்.பி., இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர்.டி.அரவிந்தராஜ், பேராசிரியர் கிளிராஜ், கம்பன் கழக பொருளாளர் ஏ.எம்.சண்முகசுந்தரம், டாக்டர் நா.ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக புரவலர் டி.கண்ணுச்சாமி வரவேற்றார்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதில் திருவெண்ணெய் நல்லூர் ம.மணிகவுண்டர்(கம்பன் காவலர் விருது), புதுச்சேரி.கலா விசு(கம்பன் கவி விருது), பாப்பநாயக்கன் பாளையம் நா.நஞ்சுண்டான்(சடையப்ப வள்ளல் விருது), ஜோ.பழனி(சமூக ஆர்வலர் விருது), விழுப்புரம் ச.தமிழரசு(எழுத்துச் செம்மல் விருது).

ராமநாதபுரம் ஊர்க்காவல்படை கமாண்டர் சத்திய சீலன்(சமூக காவலர் விருது), டாக்டர்.ரா.குலசேகரன்(கம்பன் மருத்துவர் விருது), ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி பள்ளி கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம்(கம்பன் கல்வி விருது), திருவண்ணாமலை மா.சின்ராஜ்(சமூக நல்லிணக்க விருது), புதுச்சேரி.மா.மாரியப்பனார்(மனித நேய விருது), ராமநாதபுரம் அ.ஹனீபா(இளைஞர் மேம்பாட்டு விருது), புதுச்சேரி.ரா. குணவதி மைந்தன்(கம்பன் புகழ் பரப்புநர் விருது) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு புதுச்சேரி, மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சு.சண்முகசுந்தரம் பரிசுகள் வழங்கினார். கம்பனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

விழாவில் புதுச்சேரி கவிஞர்.அ.உசேன் தலைமையில் கவியரங்கமும், மாலையில் பட்டிமன்றமும் நடந்தது. ஏற்பாடுகளை கம்பன் கழக பொதுச்செயலர் அ.மாயழகு, செயலர்.கு.விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags: , ,

Leave a Reply