ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க “1512′ தொலைபேசி எண் வசதி

ரயில் பயணிகள் தங்களது புகாரை தெரிவிப்பதற்கு “1512′ என்ற அனைத்து இந்திய ரயில்வே தொலைபேசி உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.

 

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சேவையை மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்தியாய் சௌத்ரி தொடங்கி வைத்தார். அப்போது அந்த எண்ணை பரிசோதிக்கும் வகையில், அதை தொடர்பு கொண்டு அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 1512 எண் தொலைபேசி சேவை எண் தொடங்குவதற்கு தில்லி காவல்துறை மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தில்லி காவல்துறை ஆணையர் பஸ்ஸி பேசுகையில், “தில்லி போலீஸாரின் மூளையில் உதித்த திட்டம்தான் 1512 தொலைபேசி எண் சேவை; தில்லி காவல்துறையின் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில்தான் இந்த சேவை முதலில் தொடங்கப்பட்டது’ என்றார்.
ரயில்களில் பயணம் செய்யும்போதோ அல்லது ரயில்நிலையங்களில் இருக்கும்போதோ பயணிகள், இந்த எண்ணின் மூலம் போலீஸாரிடம் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். இந்தப் புகாரை பெறும் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அலுவலர்கள், அதுகுறித்து புகார் தெரிவித்த பயணிகளுக்கு அருகில் இருக்கும் ரயில்வே காவல் நிலையங்களுக்கோ அல்லது ரயில்களில் இருக்கும் காவலர்களுக்கோ தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Tags: , , , , , ,

Leave a Reply