ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

Iman dot comரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

இறையருளின் இயக்கமதே இவ்வுலகம்

என்பதனை உணர்ந்தவர்கள்- தினம்

தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்!

மறைபொருளை மனதாலே நினைந்தபடி

நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து

அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ?

இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும்

குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை

ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ?

இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல்

இறைவனடி சேருதலே என்றும் நன்றாம்!!

பசியதுவும் எப்படியிருக்கும் என்பதனை

பசித்துணரும் மாதம்தான் ரமலான்.. அதை

பண்போடு அணுகிநிதம் நோன்புற்று

ஒருமாத காலமும் உணர்ந்திடும் மார்க்கத்தை

உள்மனதில் கொண்டு நடைபோடுகின்றார்!

அன்பென்ற சொல்லின் பொருள் விரிவாக்கி

அனைவரும் நலம்காணும் உலகைக்காண்கின்றார்!

உயிரனைத்தும் படைத்தப் பெருநாயகனின் திருப்புகழ்

ஓதிதினம் வாழுகின்ற மாந்தெரல்லாம் வாழியவே!!

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

அன்புடன்

காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)  27.07.2014

 

 

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள்!

நுண்ணறிவுக் கெட்டாத
விண்ணறிவிலும் கிட்டாத

இறைவனின் திகட்டாத
திரைவெண் ணவனருளை

திங்களொரு தினங்களிதில்
பொங்குமிருள் இரவுகளில்

கண்ணீரில் கரைத்திறைந்து
மண்ணிலும் விண்ணிலுமாய்

மகிழ்வெய்தி வாழ்வதற்காய்
முகில்கிழித்து வான்மதியாய்

வந்துசென்றது ‘ரமலான்’
விரிந்தது ‘ஈது’ மலராய் !

அனைவருக்கும் இனிய

‘ஈகைத்திருநாள்’ வாழ்த்துக்கள் !

அன்பன்மஸ்கட் மு. பஷீர்

basheer.mohammed@gmail.com

 

 

பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
நோன்பில் விதைத்தவை
மாண்புடன் விளைந்திட…
ரமளான் பயிற்சி தினம்
அமலாக்கம் பெற்றிட….
திளைக்கும் அமைதி என்றும்
தழைத்துக் கிளைத்திட….
ஈகைத் திரு நன்னாளில்
இனிய நல் வாழ்த்துகள்..
வாழ்க… வளர்க…
வஸ்ஸலாம்…அன்பு,
சேமுமு

professorsemumu@gmail.com
Tags: , ,

Leave a Reply