ரத்த தான முகாம்: அமைச்சர் பங்கேற்பு

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராமநாதபுரம் நகர் அரிம சங்கம் சார்பில் நடைபெற்ற முகாமினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் ரஹ்மானிய ஐ.டி.ஐ  மற்றும் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.  சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் எம்.சுந்தரபாண்டியன்,ஒன்றிய செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் அரசு ஐ.டி.ஐ  முதல்வர் மகேந்திரன்,ராமநாதபுரம் மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் சேக் அப்துல்லா, ரஹ்மானிய ஐ.டி.ஐ முதல்வர் பாக்கிய நாதன்,தாளாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply