யானை மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ்: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அறிமுகம்

யானை மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ்: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அறிமுகம்

கோவை சாடிவயலில் ஹைட்ராலிக் வாகனத்தில் ஏற்றப்படும் கும்கி யானை.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வனப் பிரச்சினைகள் அதிகமாகி உள்ளன. யானைகள் ஊருக்குள் நுழைந்து விட்டால் அவற்றை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பிடிபடும் யானைகளை லாரிகளில் ஏற்றுவதும் பிரச்சினையாகி வருகிறது.

இதைத் தவிர்க்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புதிய வடிவிலான யானைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யானை ஆம்புலன்ஸ் அறிமுகமாகியுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கோவையில் உள்ள சாடிவயலில் நடைபெற்றது.

இத்திட்டம் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் கூறும்போது, ‘‘திருநெல்வேலி, ஓசூர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 3 இடங்களுக்கு தனி வனத்துறை கால்நடை மருத்துவ யூனிட்டுகள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ.20 லட்சம் செலவில் இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை வடிவமைத்துள்ளோம். இதில் 10 டன் வரை ஏற்ற முடியும். கும்கி யானை பாரி 5.5 டன் எடை கொண்டது என்பதால் அதை ஏற்றி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஒரு யானையை லாரியில் ஏற்ற வேண்டுமென்றால் சாய்தளம் அமைத்து கும்கி உதவியுடன் இழுத்து ஏற்ற வேண்டும். ஆனால் ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கி வைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே அழைத்து வரலாம். மேலும் மேல்தளத்தில் வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் உள்ளதால், அடர்ந்த காட்டில் இதை நிறுத்தி, அங்கு தங்கி விலங்குகளை கண்காணிக்க முடியும். இதில் மருத்துவ வசதிகளும், அவசரகால வழியும் இணைக்கப்பட உள்ளன. யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை” என்றார்.

Tags: , , , , , , , ,

Leave a Reply