ம‌லேசிய‌ நிக‌ழ்ச்சிக‌ளில் முதுகுள‌த்தூர் த‌லைமை இமாம் ம‌ற்றும் முதுவைக் க‌விஞ‌ர்

ம‌லேசியாவில் இஸ்லாமிய‌ வ‌ருட‌ப் பிற‌ப்பு விழாவில் முதுகுள‌த்தூர் த‌லைமை இமாம் ம‌ற்றும் முதுவை க‌விஞ‌ர் ப‌ங்கேற்பு

க‌ட‌ந்த‌ 14.11.2012 புத‌ன்கிழ‌மை மலேசிய‌த் த‌லைந‌க‌ர் கோலால‌ம்பூர் ம‌த்ர‌ஸா ப‌த்ரிய்யாவில் ந‌டைபெற்ற‌ ‘மஅல் ஹிஜ்ரா’ எனும் ஹிஜ்ரி வ‌ருட‌ப்பிற‌ப்பு விழாவில் முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ ஹாஜி எஸ். அஹ‌ம‌து ப‌ஷீர் சேட் ஆலிம் ம‌ன்ப‌யீ சிற‌ப்புரை நிக‌ழ்த்தினார்.

அவ‌ர் த‌ம‌து உரையில் ந‌பிக‌ளின் தியாக‌ம், மார்க்க‌த்தில் ந‌ம‌து தியாக‌த்தின் தேவை ப‌ற்றி விள‌க்கினார்.

முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் கௌர‌வ ஆலோச‌கர் முதுவைக் க‌விஞ‌ர் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ த‌ம‌து உரையில் த‌லைமை இமாமின் சேவை, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ப‌ணிக‌ள், முதுகுள‌த்தூர் டியூச‌ன் சென்ட‌ரின் சேவைக‌ள் ஆகிய‌வை ப‌ற்றி விள‌க்கிப் பேசினார். த‌லைமை இமாம் தொகுத்த‌ளித்த‌ ‘இஸ்லாம் அழைக்கிற‌து’ நூலை அறிமுக‌ப்படுத்தினார்.

க‌ட‌ந்த‌ 21.11.2012 புத‌ன்கிழ‌மை ம‌லேசியாவில் உள்ள‌ பாரிட் புந்தார் என்ற‌ ஊரில் ம‌த்ர‌ஸா ஷ‌ம்சுல் ஹூதாவில் ந‌டைபெற்ற‌ இஸ்லாமிய‌ப் புதுவ‌ருட‌ப் பிற‌ப்பு விழாவில் த‌லைமை இமாம் உரையாற்றிய‌போது ஸ‌ஹாபாக்க‌ளின் தியாக‌ உண‌ர்வு இஸ்லாத்திற்காக‌ அவ‌ர்க‌ளின் அர்ப்ப‌ண‌ம் ப‌ற்றி உரையாற்றினார்.

முதுவைக் க‌விஞ‌ர் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ த‌ம‌து உரையில் ந‌ம‌து த‌லைமை இமாமின் 33 ஆண்டுகால‌ ச‌ம‌ய‌, ச‌முதாய‌, க‌ல்வி விழிப்புண‌ர்வு சேவை ப‌ற்றியும், ம‌த்ர‌ஸாக்க‌ள் ஆற்ற‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ள் ப‌ற்றியும் உரை நிக‌ழ்த்தினார்.

பார்த்திப‌னூர் மவ்ல‌வி ம‌த்ரஸா ஆசிரிய‌ர் முஹைதீன் அப்துல் காத‌ர் ஆலிம் பைஜி ந‌ன்றியுரை ஆற்றினார்.

மேலும் பினாங்கு, கோலால‌ம்பூர் ப‌குதிக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் மார்க்க‌ சொற்பொழிவுக‌ள் நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கு பெற‌ ஏற்பாட்டாள‌ர்க‌ள் ஏற்பாடு செய்துள்ள‌ன‌ர்.
த‌க‌வ‌ல் உத‌வி :

ம‌லேசியாவில் இருந்து
முதுவைக் க‌விஞ‌ர்

Tags: , , , ,

Leave a Reply