மே 1ம் தேதி முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

 

தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கிவருகின்றன. டீசல் விலை உயர்வு, டயர் விலை, டோல்கேட் கட்டண உயர்வு ஆகிய காரணங்களால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் ஏற்கெனவே கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.

சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாய்வு வசதி கொண்ட பஸ் கட்டணம் ரூ. 580–ல் இருந்து ரூ. 600 ஆக உயர்கிறது. வால்வோ சாய்வு வசதி பஸ் கட்டணம் ரூ. 770–ல் இருந்து ரூ. 800 ஆகவும், படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ. 810–ல் இருந்து ரூ. 860 ஆகவும் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வை வருகிற 1–ம் தேதி முதல் தமிழ் நாட்டிலும் அமல்படுத்தப் போவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பர்வீன் கூறியபோது, டீசல், உதிரிபாகம், டயர் விலை உயர்வு, காப்பீட்டு தொகை அதிகரிப்பு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply