முஸ்லிம் பதிவர்களுக்கான புதிய திரட்டி…

அஸ்ஸலாமு அலைக்கும்,பதிவுலகில் முஸ்லிம்களின் எழுத்துப் பணி மகத்தானது. மார்க்க ஆய்வுகள்,
அரசியல், தொழில்நுட்பம், சமூகம், சமையல் கலை, விமர்சனங்கள் என்று பல்வேறு
துறைகளிலும் சிறப்பாக எழுதி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து,

அனைத்து பதிவுகளையும் ஒருசேர காண வழிவகை செய்யும் வகையில் *”உம்மத்தின் குரல்
(ummath voice)”* என்ற சிறிய அளவிலான திரட்டியை தொடங்கியுள்ளோம்.

*பார்க்க:* http://ummathvoice.blogspot.in/

1. மூன்று பகுதியாக திரட்டி பிரிக்கப்பட்டுள்ளது. நடுப்பகுதி சகோதரிகளின்
தளங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு பகுதியிலும் பத்து பதிவுகள் (மட்டுமே, இது எதிர்காலத்தில் 25-ஆக
உயர்த்தப்படும் இன்ஷா அல்லாஹ்), பதிக்கப்பட்ட நேரம் அடிப்படையில்
பிரசுரமாகும்.
3. இதனால் நீண்ட காலமாக எழுதப்படாமல் இருக்கும் தளங்கள் முகப்பில் தெரியாது.
லேட்டஸ்ட் பதிவுகள் மட்டுமே காட்டும். அனைத்து தளங்களின் புது பதிவுகளையும்
ஒரே இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.
4. இன்ஷா அல்லாஹ் இதனை எதிர்காலத்தில் .com-இற்கு மாற்றும் ஐடியா உண்டு.
5. இதனை உங்கள் புக்மார்க் பகுதியில் குறித்து வைத்துக்கொள்ளவும்.
6. நீங்கள் பதிவரா? உங்கள் தளத்தை இதில்  இணைப்பது குறித்து ‘உம்மத் வாய்ஸ்”
தளத்தை காணவும்.ஆபாசம் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான தளங்களுக்கு அனுமதி கிடையாது.
தரமான தளங்களையே இணைக்க முயற்சிக்கின்றோம். இது தொடர்பாக உங்கள் ஆலோசனைகளையும்
எதிர்பார்க்கின்றோம். பல தருணங்களிலும் உறுதுணையாக இருந்த வாசகர்கள் இதனை
பார்த்து, பயனுள்ளதாக தெரிந்தால் மற்றவர்களுக்கும் கொண்டு செல்லுங்கள். இன்ஷா
அல்லாஹ்…வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

aashiq ahamed <aashiq.ahamed.14@gmail.com>

 

 

Tags: , ,

Leave a Reply