முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்

வாழ்க வாழ்கவே வாழ்கவே,
முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும்
வாழ்க வாழ்கவே வாழ்கவே
நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…,
மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும்,
வேண்டும் ஒற்றுமை கயிற்றெனும் பிணைப்பும்,
ஆண்டுக்கொருமுறை இணக்கத்தின் இணைப்பும்,
வல்லவன் அருளால் நல்லவை கூடி
       [வாழ்க வாழ்கவே வாழ்கவே]
அக்கரையுடனே இக்கறை வந்தே…,
சக்கரை பேச்சால் இனிமையும் தழைத்தே,
பக்கரை போன்றே அருங்குணம் சிறந்தே..,
எக்கரை தோரும் முதுவையின் புகழே..,
ஏஹனின் இஸ்லாம் முழுமையும் பேணி,
         [வாழ்க வாழ்கவே வாழ்கவே]
ஹக்கனின் அருளால் சிக்கன உயர்வே..,
எக்கனமேவும்  சுரு சுய உழைப்பே..,
தக்கனமாக  மெத்தனம் விடுத்தே..,
அக்கணமேதான் ஆற்றிடும் அறிவே..,
இறைவனின் நேசம் கூடியே நாளும்,
          [வாழ்க வாழ்கவே வாழ்கவே]
வாழ்த்துவது
விருதை மு.செய்யது உசேன்
055 490 83 82

Leave a Reply