முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள்,
செழுமை சொத்துக்கள்,
உரிமை பந்துக்கள்,
அருமை முத்துக்கள்,
இனிமை மிளிர்ந்திடும்,
முதுவை வாழ் தீனோர்கள்!

கண்கள் சிரிதெனும்
காணும் காட்சி பெரிதாம்,
சிறுபான்மையினராய்,
பெருபான்மை சாதித்து,
சாதனை வென்ற,
முதுவை வெற்றியாளர்கள்!

கெண்டையை போட்டு,
விராலை பெருகின்ற,
வியாபார நுனுக்கத்தால்,
கிராமத்திலிருந்தாலும்,
கிரிடமாய் பிரிடமாய்,
திகழ்கின்ற மேன்மக்கள்!

அக்கறையோடு,
அக்கரை தொட்டு,
இக்கரை வந்து
சக்கரை பேச்சால்,
எக்கரை வென்று,-அபு
பக்கரை சார்ந்த சான்றோர்!

கூடியே ஒற்றுமையால்,
கோடி பலன் கண்டவர்கள்,
நாடியே கல்வியினை,
ஓடியே பயின்றவர்கள்
தேடியே செல்வத்தால்
பாடியே மகிழ்ந்தவர்கள்!

ஏக்கத்தால் போறாடி,
தாக்கத்தால் முன்னேறி,
ஆக்கத்தால் ஏற்றத்தை,
எட்டியே உயர்ந்திட்ட,
உங்களனைவர்க்கும்,
என் மனமார்ந்த  வாழ்த்துக்கள்!

விருதை மு. செய்யது உசேன்
055 490 83 82

Tags: , ,

Leave a Reply