முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து !

moulaviumarjahfer
முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து !
ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ( வயது சுமார் 58 ) அவர்கள் இன்று 01.03.2014 சனிக்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 02.03.2014 ஞாயிறு  மாலை 5.30 மணிக்கு முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசலில் நடைபெறும்.
லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் 1969 முதல் 1975 ஆம் ஆண்டு வரை ஓதினார்.  தமிழ் இலக்கியத்தில் மிகுந்த  ஆர்வம் கொண்டவர்.
மலேசியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த காலங்களில் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கி மார்க்க விழிப்புணர்வினை ஏற்படுத்தியவர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அழைப்பின் பேரில் துபை வருகை புரிந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்  பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

ஜனாஸா  நல்லடக்கத்தில்  பங்கேற்க மலேசியாவில் இருந்து அவரது இரு மகன்களும், துபையில் இருந்து அவரது மருமகன் ஹபிபுல்லாவும் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமீரகத் தொடர்புக்கு
இம்தாதுல்லா : 055 524 8 000 / முதுவை ஹிதாயத் 050 51 96 433
தாயகத் தொடர்பு
மௌலவி பஷீர் சேட் ஆலிம்
944 36 10 495
முதுவைக் கவிஞரின் படைப்புகள்
Tags: , ,

Leave a Reply