முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம்

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் 01.05.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார்.

ஜாவித் இறைவசனங்களை ஓதினார்.

கௌரவ தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆலோசகர்கள் ஹெச். ஹஸன் அஹமத், சம்சுதீன் சேட்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் ஜாஹிர் ஹுசைன், அஹமது இம்தாதுல்லா, ஹபிப் திவான், ஜாபர், முஹம்மது,  அசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொருளாளர் ஜஹாங்கீர் நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

1 முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர், எம்.பி.எம். அன்சாரி, எம்.கே. சிக்கந்தர், காஜா மகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களை நமது ஊரில் டியூசன் துவக்க விழாவிற்கு அழைப்பது

3. முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ நினைவாக பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் நமது டியூசன் மாணவர்களுக்கு பரிசு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ummj01may2014

Tags: , , ,

Leave a Reply