முதுவைக் கவிஞர் மறைவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் இரங்கல்

moulaviumarjahfer1மார்க்க அறிஞர் மறைவு

ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், உலகறிந்த மார்க்கப்

பேச்சாளரும், சிறந்த எழுத்தாளரும், தேர்ந்த கவிஞருமான மெளலவி அல்ஹாஜ் ஏ. உமர்
ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள் 01-03-2014 சனிக்கிழமை நள்ளிரவு வபாத்தானார்கள்.
(இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
பழகுதலில் எளிமையும் பண்புநலனில் இனிமையும் மிக்க மார்க்கக் கவிஞரின் மறைவு
மிகுந்த வேதனையை நல்குவதாகும். அவர்கள்தம் சமுதாயத் தொண்டும் மார்க்கச் சேவையும்
என்றென்றும் மறக்கவியலாதவை. அன்னாரது மறைவுத் துயரில் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு
இயக்கம் ஆழ்ந்த வேதனையைப் பதிவு செய்துகொள்கிறது.
வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மறுமை நல்சுவன பாக்கியத்தை அருளவும்
அன்னாரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமை நல்கவும்
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்….
பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
02 மார்ச் 2014 மணிச்சுடர் நாளிதழில் முதுவைக் கவிஞரின் வஃபாத்து செய்தி
http://www.muslimleaguetn.com/mc_020314.asp

Leave a Reply