முதுகுள‌த்தூரில் விரைவில் திற‌ப்பு விழா காண‌ இருக்கும் பெண்க‌ள் ப‌ள்ளி

முதுகுள‌த்தூர் :முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்திற்குட்ப‌ட்ட‌ ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌த்திற்குட்ப‌ட்ட‌ இட‌த்தில் ஹிம்ம‌த்துல் இஸ்லாம் நிஸ்வான் ம‌ஜ்லிஸ் எனும் பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளிவாச‌ல் க‌ட்டும் ப‌ணி ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

க‌ட்டிட‌ப் ப‌ணிக‌ள் இறுதிக் க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌தாக‌வும், விரைவில் இத‌ற்கான‌ திற‌ப்பு விழா நடைபெற‌ இருப்ப‌தாக‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் மௌல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் அமீர‌க‌ ஜ‌மாஅத் நிர்வாகிக‌ளும் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பிக்க‌வும் கேட்டுக் கொண்டார்.

ப‌ட‌ங்க‌ள் :

ஏ. அஹ்ம‌த் இம்தாதுல்லா,

பொதுச்செய‌லாள‌ர்,

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்

ஐக்கிய அரபு அமீரகம்

Tags: , ,

Leave a Reply