முதுகுளத்தூர் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூர் வர்த்தக சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்துக்கு, முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி. கருப்பசாமி தலைமை வகித்தார். செயலர் எம். செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ். முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இதில், முதுகுளத்தூர் பேருந்து நிலையம், தேரிருவேலி முக்கு ரோடு, காந்திசிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இலவச கழிப்பிட வசதிகள் செய்து தரவும், முதுகுளத்தூர் மயானம் உள்ள இடத்தில் பேரூராட்சியினர் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், வார்டுகள் முழுவதும் கழிவுநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை பேரூராட்சி அலுவலர் ஆர். இளவரசியிடம் நகர் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மனுவாக வழங்கினர்.

Tags: , ,

Leave a Reply