முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

sports1sports2sports3முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்திறன் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

மாவட்ட கல்வி அலுவலர் வி. பழனியாண்டி தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன், ஜமாத் தலைவர் ஏ.காதர் முகைதீன், கல்விக் குழுத் தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ். சௌக்கத்அலி, தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ.சேட் ஜாஹிர்உசேன், நர்சரி பள்ளி தாளாளர் எஸ்.முகம்மது இக்பால், டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வட்டார அளவில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 14,17,19 வயதிற்கு உள்பட்ட தனித்திறன் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பெற்றது.

அதேபோல் வட்டார அளவில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 14,17,19 வயதிற்கு உள்பட்ட தனித்திறன் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றது. இரு நாள்கள் நடைபெற்ற போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் கே. கமால்பாட்ஷா, வேதமலை, எம். அன்சாரி, ஆர். பாலசுந்தரம், பி. கோகிலா, அனிதா ஆகியோர் பணியாற்றினர்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வி. முனியாண்டி சான்றிதழ் வழங்கினார். பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன் நன்றி கூறினார்.

Tags: , ,

Leave a Reply