முதுகுளத்தூர் தொகுதி வளர்ச்சி பெற …………………..

இராமநாதபுரம் மாவட்டம் வளம் பெறவும், அதில் மிகவும் பின் தங்கிய பகுதியான முதுகுளத்தூர் தொகுதி வளர்ச்சி பெறவும்

1. நான்கு வழிச்சாலைகள்

2. இரயில் போக்குவரத்து

3. மாவட்டத்தில் கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு நீர்வழிப்போக்குவரத்தும் நீர்வளமும் பெருக வேண்டும்

4. மாவட்டத்தில் விவசாயமும், தொழில்வளமும், மீனவர் நலமும், கல்வியும், மருத்துவமும், கால்நடை வளர்ப்பு மற்றும் உப்பு உற்பத்தியும் பெருக வேண்டும்

5. மாவட்டம் பிற நதிகளால் இணைக்கப்பட வேண்டும்.

 

1.முதுகுளத்தூர் தொகுதியில் பரமக்குடி முதல் தூத்துக்குடி வரை புதிய இருப்புப்பாதை போட்டால் போதுமானது. இத்தொகுதியில் சாலை வசதிகள் குறைவு மேலும் இராமநாதபுரம் மாவட்டம் வளம்பெற வேண்டுமானால் முதுகுளத்தூர் தொகுதி 4 வழிச்சாலைகளால் இணைக்கப்பட வேண்டும் அதற்கு புண்ணிய பூமியாம் இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம், உத்திரகோசமங்கை, முதுகுளத்தூர், கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வரை மூன்று மாவட்டங்கள் உள்ளடக்கி கேரளா எல்லையான செங்கோட்டை வரை வந்தால் இராமநாதபுரம் மென்மேலும் தொழில்வளர்ச்சி பெற மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதன் மூலம் தமிழ்நாடு கேரளா இணைக்கப்படும்.

 

2. 1945 லேயே சென்னை – கன்னியாகுமரி வழி காரைக்குடி, மானாமதுரை வழியாக முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, தூத்துக்குடி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை இருப்புப்பாதை இரயில் போக்குவரத்திற்காக கணக்கெடுப்பு நடத்தி சர்வே பண்ணியதாக உள்ளது. கடலாடி சமீபம் அதன் சர்வேகள் இருந்ததாக கூறுகின்றார்கள். ஆகவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவாகவே உள்ள கோரிக்கையான இரயில் இருப்புப்பாதை போடப்பட்டு இரயில்போக்குவரத்து ஏற்படுத்தினால் தொழில்வளம் பெருகும்.

 

3. மாவட்டம் முழுவதும் ஆறுகள் வழித்தடங்களில் கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு ஆறுகள் இருபுறமும் கரைகளில் சுவர்கள் கட்டி நீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கண்மாய்கள் குளங்களில் கருவேல மரங்கள் முழுவதும் நிரந்தரமாக சுத்தப்படுத்தி தண்ணீர் சேமிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கண்மாய்கள் அதிகம். கண்மாய்கள் முழுவதும் நீரால் சூழப்பட்டால் மனிதவளமும் மனிதநேயமும் மிக்க மாவட்ட மக்களால் விவசாயம் முழுமையாக பாடுபட்டு அதன் பலனை அடைந்து விவசாய மகசூலில் வளர்ச்சியில் மாநிலத்திலேயே முதன்மை மாவட்டம் என்ற சீரிய இடத்தைப்பெறும். ஏறக்குறைய மாவட்டத்தில் 60 சதவீதம் விட்ட விவசாயத்தை கண்மாய்கள் நீரால் சூழப்பட்டால் 100 சதவீதம் விவசாயமும், விவசாயிகளும் வளம் பெற்று விடுவார்கள் அதன் பலனாக கால்நடைகளும் பெருகும் பால் உற்பத்தியில் முதல் இடமும் பெற்றுவிடும்.

 

4. மாவட்டத்தில் விவசாயப்பண்ணைகளும், தொழிற்சாலைகளும், உயர்வான கல்வி வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் உயர்வான மருத்துவ சிகிச்சைகளும், நிரந்தர மீனவர் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு மீனவர்கள் நலனும் மாவட்டத்தில் முன்பு பனைமரங்கள் மிக அதிகமாக இருந்த நிலை மாறி குறைந்து வருவதை தடுத்து பனைமரங்கள் வளர்க்கவும், மாவட்டத்தில் பனைமரங்கள் நல வாரியம் அமைக்கவும், உப்புத்தொழில் பெருகவும், விளைநிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விற்பனை செய்வதை தடுத்து மீண்டும் விவசாய நிலங்களாகி பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும், மாநிலத்திலேயே முதன்மை இடம் பெற்ற கால்நடை வளர்ப்பில் மீண்டும் முதல்இடம் பெறவும் மாண்புமிகு தமிழக முதல்வர் பாரதத்தின் எதிர்காலமான அம்மா அவர்கள் தொடர் நடவடிக்கை எடுக்கவும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

5. மாவட்டம் பிர நதிகளால் இணைக்கப்படவேண்டும் மாண்புமிகு. தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஏற்கனவே இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அவர்களின் சீரிய தொடர் நடவடிக்கைகளால் இந்தியத்திருநாட்டில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தைப் பெறப்போவது உறுதி. அதேபோல் தமிழ்நாட்டின் தென்பகுதியான நிறந்தர வறட்சி மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தை மாநிலத்தில் முதன்மை மாவட்ட நிலைமை அடைய மேற்கண்ட 5 கோரிக்கையும் நிறைவேற்றி தரும்படி மாவட்ட மக்களின் சார்பாகவும் முதுகுளத்தூர் தொகுதி மக்களின் சார்பாகவும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதிமுக கடலாடி ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply