முதுகுளத்தூர் தொகுதி மேம்பாட்டுக்கு பணிபுரிவேன் – சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் சிறப்பு பேட்டி

முதுகுளத்தூர் தொகுதி மேம்பாட்டுக்கு பணிபுரிவேன் –

சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் சிறப்பு பேட்டி

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்கு பணிபுரிவேன் என கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய சட்டமன்ற உறுப்பினராக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மலேசியா பாண்டியன் முதுகுளத்தூர்.காம் இணையதளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். முதுகுளத்தூர்.காம் இணையதள ஆசிரியர் முதுவை ஹிதாயத் இடம் அளித்த விபரம் வருமாறு :

தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்து வரும் பாண்டியன் கடந்த 1947-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிராமம், கொடுமலூர் அருகேயுள்ள கொட்டக்குடியில் பிறந்தவர். அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தவர்.

அதனைத் தொடர்ந்து 1958-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு சென்றார். அங்கு சிறு சிறு வேலைகள் செய்து அதனைத் தொடர்ந்து நல்ல நிலையில் உயர்ந்துள்ளார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கண்ணப்பன் நடத்தி வந்த கட்சியில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 2,600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. பதினெட்டாம்படியானிடம் தோல்வியடைந்தார்.

அது முதல் கடந்த 15 ஆண்டுகளாக அந்த தொகுதி மக்கள் மத்தியில் சிறப்பான சேவைகளை செய்து வருகிறார். பல்வேறு நலப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் காரணமாக முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் மக்கள் நல்ல ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவினாலும் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவுடன் 13,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியினை பெற்றார்.

சமீபத்தில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. புதிதாக திட்டங்கள் எதற்கும் இதுவரை நிதி ஒதுக்கீடு இதுவரை செய்யப்படவில்லை.

எனினும் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற முக்கிய பங்காற்றி வருகிறேன்.

மின்கம்பங்கள் அதிகம் பழுதடைந்துள்ளன. அவைகள் சீரமைக்கப்பட வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.

மேலும் பல்வேறு நலப்பணிகள் நிறைவேற பாடுபடுவேன் என்றார்.

 

( விரிவான தகவல்கள் விரைவில் )

 

Tags: , , , ,

Leave a Reply