முதுகுளத்தூர் தொகுதியில் 2.83,504 வாக்காளர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 48297 வாக்காளர்கள்: ஆட்சியர்

ramnadராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 48297 பேர் வாக்காளர்களாக தங்களது பெயர்களை புதிதாக பதிவு செய்திருப்பதாக வெள்ளிக்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,18,554 ஆண் வாக்காளர்களும்,5,11,682 பெண் வாக்காளர்களும்,மற்ற வாக்காளர்கள் 61 பேர் உட்பட மொத்தம் 10,30,297 வாக்காளர்கள் உள்ளனர். திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 24254 ஆண் வாக்காளர்களும்,24037 பெண் வாக்காளர்களும்,6 திருநங்கையர்களும் ஆக மொத்தம் 48297 வாக்காளர்கள் கூடுதலாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பரமக்குடியில் 2,31,935,திருவாடானையில் 2,51,541,,ராமநாதபுரம் 2,63,317, முதுகுளத்தூர் 2,83,504 உட்பட மொத்த வாக்காளர்கள் 10,30,297 பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் 1225 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

இவற்றுக்கான வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த பகுதி வருவாய்த்துறை அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிடலாம். வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தங்களும் இம்மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி கடந்த 1.1.2014 ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தியடையும் நபர்களும் இதுவரை தங்களது பெயர்களை பதிவு செய்யாத நபர்களும் உரிய சான்றுகளுடன் தங்களது பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் செய்து கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களையும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து பயன் பெறலாம்.

இது தவிர இணைய தள வழி மூலமாகவும் தங்களது பெயர்களை சேர்க்கலாம். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 தனியார் பிரவுசிங் சென்டர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அம்மையங்கள் மூலமாகவும் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply