முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

முகாம் நிறைவு விழா கல்லூரி தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில், பேரூ ராட்சி தலைவர் வி.ஏ. முத்து அபுபக்கர், செயல் அலுவலர் ஆர். ராஜாராம், கல்லூரி மு தல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பேராசிரியர் வேலவன் வரவேற்றார்.      விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கவுன்சிலர்கள், பிரமுகர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: , , ,

Leave a Reply