முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ். கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.

 

வணிகவியல் துறைத்தலைவர் வேலவன் வரவேற்றார். ராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வணிகவரி சட்டங்கள் என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் திலீப் நன்றி கூறினார்.  அதேபோல் கல்லூரி கணினி துறையில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் எஸ். கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி துணைப் பேராசிரியை வி. லெட்சுமி பிரபா டிஜிட்டல் இமேஜ் பிராசசிங் மற்றும் அதன் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கணினி துறைத்தலைவர் கே. மலர்விழி, பேராசிரியர்கள் ஜி. பிரபு, எஸ். முகம்மது யூசுப், என். வைரமுத்து மற்றும் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags: , , ,

Leave a Reply