முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: இன்று திறப்பு விழா

முதுகுளத்தூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.தேவதாஸ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு தமிழக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகிக்கிறார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்,  முதுகுளத்தூர் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் கே.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி(பொறுப்பு)எம்.பி.ராம் வரவேற்றுப் பேசுகிறார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும், நீதிபதிகள் குடியிருப்பையும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.தேவதாஸ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் பொதுப்பணித்துறை மேற்பார்வைப் பொறியாளர் பி.முத்துக்குமார், முதுகுளத்தூர் வழக்குரைஞர் சங்க செயலாளர் கே.முருகபூபதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிபதி ஜெ.சந்திரன் நன்றி கூறுகிறார்.

Tags: , , ,

Leave a Reply