முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் பதவி: கைப்பற்றியது அ.தி.மு.க., நனவானது 50 ஆண்டு கனவு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றி 50 ஆண்டு கனவை நிறைவேற்றி சாதனை படைத்தது.ஒன்றிய தலைவரை தேர்வு செய்யும் முறை 1961ல் அமல்படுத்தபட்டது. அது முதல் முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க.,- காங்., மட்டுமே கைப்பற்றி வந்தன. தி.மு.க., தலைவர்கள் நான்கு முறையும், காங்., தலைவர்கள் இருமுறையும் ஒன்றிய தலைவர் பதவியில் இருந்தனர்.சமீபத்திய தேர்தலில் இந்த ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க., 11, காங்., 1, சுயே., 3ஐ கைப்பற்றின. இதன் மூலம் 50 ஆண்டுகளாக கனவாகவே இருந்த தலைவர் பதவி அ.தி.மு.க.,விற்கு நனவானது.

Tags: , , , , ,

Leave a Reply