முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 31.01.2011 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் கீழக்கரை மௌலவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மா மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் சீனி முஹம்மது, துணைத்தலைவர் ஏ. ஹுமாயூன், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம். காதர் முகைதீன், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவை கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் இக்பால் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags: , , ,

Leave a Reply